'கொரோனா நேரத்திலும் நாம சாதிச்சிருக்கோம்'... 'மாஸ் காட்டிய தமிழ்நாடு'... முதல்வர் பெருமிதம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இந்தியாவில் அதிக முதலீட்டை ஈர்த்த 10 மாநிலங்களின் தர வரிசைப் பட்டியலில் தமிழ்நாடு 2வது இடத்தில் இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு, பொருளாதாரத்தை மீட்டெடுக்க, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில், அதிக கவனம் செலுத்தி வருகிறது. வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க, வெளிநாட்டு தூதர்கள் உடனான சந்திப்பு மற்றும் சிறப்புப் பணிக்குழு அமைத்தல் என, பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. பொருளாதார மீட்பு நடவடிக்கைகளுக்காக ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் சி. ரங்கராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழு தனது பரிந்துரைகளை அரசிடம் அளித்துள்ளது. அக்குழுவின் பரிந்துரைகளை அரசு படிப்படியாக நிறைவேற்றும் என்று முதல்வர்  எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதனிடையே தமிழகத்தில் முதலீடு செய்ய, அழைப்பு விடுத்து, தொழில் நிறுவனங்களுக்கு, முதல்வர் அவ்வப்போது கடிதம் எழுதி வருகிறார். முதலீடு செய்ய வரும்படி, முன்னணி மோட்டார் நிறுவனங்களுக்கு, ஜூனில் அழைப்பு விடுத்திருந்தார். இதன் காரணமாக, ஊரடங்கின் போது, ரூ.30 ஆயிரம் கோடி வரை முதலீடு பெறப்பட்டது. கடந்த ஐந்து மாதங்களில் 41 நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், மேலும் 14 புதிய தொழில் நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்யவுள்ளன. ஜே.எஸ். டபிள்யூ., எனார்ஜி லிமிடெட், அப்பல்லோ டயார்ஸ், பிரிட்டானியா கம்பெனி, ஐநாக்ஸ் லிக்யுட் ஆக்ஸிஜன் தயாரிக்கும் நிறுவனம் உள்ளிட்ட 14 தொழில் நிறுவனங்களுடன் தமிழக அரசு திங்கள்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளவுள்ளன. இதனிடையே கொரோனா பெருந்தொற்று காலத்திலும் தங்கள் மீது நம்பிக்கை வைத்து தமிழ்நாட்டில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்