'சிக்னல் காட்டுது.. ஆனா சிக்கல'.. தனிப்படை போலீசுக்கே டஃப் கொடுக்கும் இளம்பெண்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை திருவான்மியூர் விஐபியை ஏமாற்றி வீட்டு வேலையாளான இளம் பெண் ஒருவர் போலீஸாருக்கு டஃப் கொடுத்துக்கொண்டிருப்பது போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாகியுள்ளது.

சில நாட்களுக்கு முன், கோடை விடுமுறைக்காக வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் வெளியூர் சென்றிருந்தபோது, அந்த விஐபி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அந்த வீட்டில் சித்ரவள்ளி என்கிற பெயரில் பணியாளாக அறிமுகமாகிய  இளம் பெண், கொஞ்ச நாள் வேலை பார்த்துள்ளார். பிறகு ஒருநாள், தன்னை அந்த இளம் பெண் பணம் கேட்டு மிரட்டல் விடுப்பதாக அந்த விஐபி திருவான்மியூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அந்த பெண்ணை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஆனால் தனிப்படை அமைத்தும், அந்த பெண்ணின் செல்போன் சிக்னல்கள் அவ்வப்போது கிடைத்தும் ஆனால் பிடிப்பதற்குள் எஸ்கேப் ஆகிவிடுவதாகவும், திரிசூலம் பகுதியில் சிக்னல் காட்டுவதாகவும் அப்போது உடனே போலீஸ் விரைந்து சென்றும் அந்த பெண்ணை பிடிக்க முடியவில்லை என்று தனிப்படை போலீஸார் கூறுகின்றனர்.

ஒருவேளை அந்த பெண்ணை போலீஸ் ட்ரேஸ் செய்யும் தகவலை போலீஸ் துறையில் கறுப்பு ஆடாக இருக்கும் யாரோ காட்டிக்கொடுக்கிறார்களோ என்கிற முறையிலும் விசாரித்து வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். புகார் அளித்த விஐபியோ அந்த இளம் பெண் தம்மை வீடியோ எடுத்துவைத்துக்கொண்டு தன்னிடம் செக் போட்டு பணம் பறித்ததாகவும் மேற்கொண்டு பணம் கேட்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் வீடியோ ஆதாரத்தையும் தரவில்லை, அதன் விபரத்தையும் புகாரில் கூறவில்லை என்பதால் போலீஸார் குழம்புவதாகக் கூறப்படுகிறது.

ஆன்லைன் மூலம் விஐபியின் வீட்டுக்கு வந்த அந்த இளம் பெண்ணை அறிமுகப்படுத்திய நபர் பற்றிய விபரங்கள் தற்போது கிடைத்துள்ளதாகவும், விரைவில் அந்த பெண்ணை பிடித்துவிடுவோம் என்றும் போலீஸார் கூறுகின்றனர்.

POLICE, CASE, BIZARRE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்