'ஆம்புலன்ஸ்' மூலம் 'கோவைக்குள்' நுழையும் 'மக்கள்'... 'தங்களைத்' தாங்களே 'கடத்திக்' கொள்ளும் 'விநோதம்..'. "லாக் டவுனுக்கு மரியாதையே இல்லை..." 'திணறும்' அதிகாரிகள்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழ்நாடு எல்லை வழியாக ஆம்புலன்ஸ் மூலம் சோதனையின்றி பொதுமக்கள் கோவைக்குள் நுழையும் நிகழ்வுகள் கோவை மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் தமிழக அரசு கேரள எல்லையை மூடியுள்ளது.

அதிகாரிகள், மருத்துவர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோர் எல்லைப்பகுதிகளில் இரவு பகலாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு-கேரள எல்லையான வாளையார் பகுதியிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் பொதுமக்கள் கோவைக்குள் நுழையும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கின்றன. அரசின் விதிகளை மீறி வரும் இவர்களுக்கு கேரள காவல் துறையும் உடந்தையாக உள்ளது எனக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இப்படி ஆம்புலன்சில் சட்டவிரோதமாக வரும்பொழுது, தமிழ்நாடு அதிகாரிகள் தடுத்து நிறுத்துவதற்குக், கேரளா எல்லையில் எதிர்ப்புகள் தெரிவிக்கப்படுகிறது. நோயாளியை அழைத்துச் செல்லும் ஆம்புலன்ஸ் தமிழ்நாடு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்படுவதாகத் தவறான வதந்திகளும் பரப்பி விடப்படுகின்றன. இதனால் செய்வதறியாது அதிகாரிகள் திகைத்து வருகின்றனர்.

தெலங்கானா போன்ற மாநிலங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்தபோது, முறைகேடுகளை கட்டுப்படுத்த மாநில போலீசார் கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதேபோல்  சட்டவிரோத நுழைவை கட்டுப்படுத்துமாறு கோவை மக்கள் போலீசாருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

CORONA, COIMBATORE, TAMILNADU, KERALA, BORDER, AMBULANCE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்