"நீர் மேலாண்மை விஷயத்துல... 'இந்தியா'லயே நம்ம தான் 'டாப்பு'... 'தமிழக' முதல்வரின் 'அதிரடி' பிரச்சாரம்!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தலுக்காக தீவிரமாக தயாராகி வருகிறது.

இந்நிலையில், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில், தமிழக முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். திருவையாறு, பாபநாசம், நன்னிலம், மன்னார்குடி, திருவாரூர், திருவிடைமருதூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து முதல்வர் பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய முதல்வர், 'நான் எப்படி முதல்வர் ஆனேன் என்பது நாட்டுக்கே தெரியும். எங்கள் ஆட்சியை கவிழ்க்க நெருக்கடிகள் இருந்தது என்பதும் மக்களுக்கும் தெரியும். ஒரு விவசாயி முதல்வர் ஆகக் கூடாதா?. நான் விவசாயி என்பதால் விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்த்து வைத்துள்ளேன். ஸ்டாலின் டெல்டா மாவட்டங்களுக்கு என்ன செய்துள்ளார்?. விவசாயிகளின் நிலத்தை, தனியாருக்கு தான் கொடுத்துள்ளார்.

நாங்கள் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்க சட்டம் கொண்டு வந்துள்ளோம். ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாரி, குடிமராமத்து பணிகள் நடைபெற்றதன் காரணமாக, கோடை காலத்தில் நீர் தட்டுப்பாடு ஏற்படுவதில்லை.


இந்தியாவிலேயே பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு அதிக இழப்பீட்டை பெற்றுத் தந்த ஒரே அரசு அதிமுக அரசு தான். அது மட்டுமில்லாமல், நாட்டிலேயே நிர்வாக ஆளுமையில் மிகச் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதாக, மத்திய அரசே அறிவித்துள்ளது' என முதல்வர் பழனிசாமி பிரச்சாரத்தின் போது பேசினார்.

இதில், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் காமராஜை ஆதரித்து, பிரச்சாரத்திற்கு வந்த முதலமைச்சரை, டிராக்டரில் அழைத்துச் சென்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்