நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன் திட்டம்.. தங்களது ஒருநாள் ஊதியத்தை அளிக்க முன்வந்த ஐஏஎஸ் அதிகாரிகள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளை தரம் உயர்த்தும் 'நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்' திட்டத்திற்கு ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களது ஒரு நாள் ஊதியத்தை அளித்திருக்கின்றனர்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | காத்துவாக்குல 2 காதல்.. ஒரே நேரத்துல 2 பெண்களை கரம் பிடித்த வாலிபர்.. மனுஷன் செஞ்ச பிளான் தான்..!
நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்
தமிழ்நாட்டில் இயங்கி வரும் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் நோக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டம் தொடங்கப்பட்டது. அப்போது பேசிய முதல்வர் முக.ஸ்டாலின் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் தங்களது பள்ளிக்கு உதவ வேண்டும் எனவும் இது ஒரு சமுதாயக் கடமை எனவும் தெரிவித்து இருந்தார். இதன் மூலம் கிடைக்கப்பெறும் நிதி அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் அரசு பள்ளிகளுக்கும் அங்கு பயிலும் மாணவ மாணவியர்களின் வளர்ச்சிக்கும் செலவிடப்படும் என அவர் உறுதியளித்திருந்தார்.
உதவி
இந்த திட்டத்தை துவங்கி வைத்து பேசிய முதல்வர் முக.ஸ்டாலின்,"எல்லா முன்னேற்றத்தையும் அரசே முழுமையாக செய்வது இயலாத ஒன்று. இதற்கு மக்களும் கைகோர்த்து முன்னேற்றத்திற்கு உதவ வேண்டும். ஒவ்வொருவருடைய வாழ்விலும் வசந்தகாலம் என்பது பள்ளிக் காலம்தான். நாம் இந்தளவிற்கு உயர்வதற்கு, இந்த உயரத்தை அடைவதற்கு உதவியாக இருந்தது அந்தப் பள்ளிக் கூடம் தான்.
Images are subject to © copyright to their respective owners.
அந்தப் பள்ளிக் கூடங்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டாமா? என்ற உன்னதமான நோக்கத்தோடு "நம்ம ஸ்கூல் பவுண்டேசன்" நம்ம ஊர் பள்ளி என்ற பெயரில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டிருக்கிறது. பயன்பெற்றவர்கள் தங்களது நன்றியின் அடையாளத்தைத் தெரிவிக்கலாம். அதற்கான வாசற்படிதான் இந்த நம்ம ஊர் பள்ளி திட்டம்" எனத் தெரிவித்திருந்தார். இந்த திட்டம் தொடங்கப்பட்ட முதல் நாளில் மட்டும் 50 கோடி ரூபாய் நன்கொடையாக கிடைக்கப் பெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஒருநாள் ஊதியம்
இந்த நிலையில் தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களது ஒரு நாள் ஊதியத்தை நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன் திட்டத்திற்கு அளிக்க முன்வந்திருக்கின்றனர். அதன்படி தங்களது மார்ச் மாதத்தின் சம்பளத்தில் இருந்து ஒருநாள் ஊதியத்தை அளிக்க இருப்பதாக தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். இதனை ஏற்றுக்கொண்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது.
Images are subject to © copyright to their respective owners.
அரசு பள்ளிகளில் பயின்று தற்போது தொழிலதிபர்களாக இருக்கும் பலர் தமிழக அரசின் இந்த திட்டத்துக்கு உதவி செய்தும் வருகின்றனர். இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களது ஒருநாள் ஊதியத்தை நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன் திட்டத்துக்காக அளித்திருப்பது பலரையும் நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.
Also Read | திடீர்னு வெடிச்ச ஃப்ரிட்ஜ்.. வீட்டுக்கு சென்ற போலீஸ் அதிகாரிக்கு நேர்ந்த சோகம்.. பொள்ளாச்சியில் பரபரப்பு..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கணவரின் சம்பளம் எவ்வளவு..? தகவல் அறியும் உரிமை சட்டத்தை நாடிய மனைவி.. அதிரவைக்கும் பின்னணி..!
- அம்மாக்கு அனுப்புறதுக்கு பதிலா.. முதல் மாச சம்பளத்த வேற நபருக்கு அனுப்பிய பெண்.. "கடைசி'ல அந்த நபர் சொன்னத கேட்டு கண்ணீரே வந்துடுச்சு"
- "நாலு வருஷமா இதான் பண்ணுறாரு.." வேலையே பாக்காம சம்பளம் வாங்கும் வாலிபர்.. மிரண்டு போன நெட்டிசன்கள்
- குறைஞ்சபட்ச சம்பளமே ரூ.63 லட்சம்... "உழைக்கிறவங்களுக்கு நியாயமான சம்பளத்தை கொடுக்கனும்".. அதிரவைத்த CEO.. யாரு சாமி இவரு..?
- "ஹய்யா.. Salary ஏத்திட்டாங்க".. இளம்பெண் போட்ட வீடியோ .. அப்போ பாத்து வந்த E-mail.. நொடியில் மாறிய வாழ்க்கை..!
- "3 வருசமா Students யாரும் வரல.. சம்பளம் மட்டும் எதுக்கு??.." ரூ.23.82 லட்சத்தை திருப்பி கொடுத்த பேராசிரியர்!
- "இனி பணத்துல சம்பளம் கொடுக்கமாட்டேன். இனிமே அதுதான் பெஸ்ட் வழி"..CEO போட்ட புது ஆர்டர்.. திகைத்துப்போன ஊழியர்கள்..!
- இந்த ஊழியர்களுக்கு எல்லாம் அடிக்கப்போகுது ‘செம’ ஜாக்பாட்.. 6 வருசத்துல இல்லாத அளவுக்கு ஊதிய உயர்வு இருக்கலாம்? ஆய்வில் தகவல்..!
- ‘கண்ணை மூடி திறப்பதற்குள் கோடிஸ்வரர் ஆகிடுவாங்க’.. ஐபிஎல் ஏலத்தில் இந்த ரூல்ஸை கொண்டு வரணும்.. கவாஸ்கர் கொடுத்த புது ஐடியா..!
- SSC அறிவிப்பு: +2 படிச்சிருந்தா போதும் 80,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!