‘எந்த மாவட்டம் முதலிடம்?.. எந்த சைட்டில் பார்க்கலாம்’.. பரபரப்பான சூழலில் வெளியான +2 தேர்வு முடிவுகள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் இந்த முறை ஏப்ரல் மாதத்திலேயே வெளியாகியுள்ளன.
2018-2019-ஆம் ஆண்டுக்கான பிளஸ் 2 தேர்வினை 8,42,512 மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் 4,53,262 மாணவிகளும், 3,89,250 மாணவர்களும் அடக்கம். தமிழ்நாட்டில் உள்ள 7,083 மேல்நிலைப் பள்ளிகளில் 1,281 பள்ளிகள் இந்த தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளன.
இந்த பொதுத் தேர்வில் ஒட்டுமொத்தமாக தமிழக அளவில் மொத்த தேர்ச்சி விகிதம்- 91.03% ஆகவும், இதில் மாணவிகள் தேர்ச்சி விகிதம் 93.64% ஆகவும், மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.57% ஆகவும் உள்ளன. குறிப்பாக மாணவர்களைவிட மாணவிகள் 5.07% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளதை கவனிக்க முடிகிறது.
மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டமாக திருப்பூர் மாவட்டம் 95.37% தேர்ச்சி பெற்று முதலிடத்திலும், ஈரோடு மாவட்டம் 95.23% தேர்ச்சி பெற்று 2-வது இடத்திலும், 95.15% பெற்று பெரம்பலூர் மாவட்டம் 3-வது இடத்திலும் உள்ளன.
மாணவர்கள் பதிவு செய்துள்ள பெற்றோரின் செல்போனுக்கு குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவுகளை 2 நிமிடங்களில் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்த +2 மதிப்பெண் சான்றிதழ்களை நாளை முதல் ஏப்ரல் 26 வரை பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் மறுகூட்டல், விடைத்தாள் நகல் உள்ளிட்டவற்றிற்கு ஏப்ரல் 22 முதல் ஏப்ரல் 24-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
+2 பொதுத்தேர்வு முடிவுகளை கீழ்க்காணும் இணையதளங்களில் பார்க்கலாம்.
http://tnresults.nic.in/
http://dge1.tn.nic.in/
http://dge2.tn.nic.in/
https://t.co/ybAzg3pb0A?amp=1
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது? எந்த இணையதளத்தில் பார்க்கலாம்!
- மண்புழுவா.. குமாரசாமியா.. எடியூரப்பாவா..? - வைரலான பள்ளி வினாத்தாள்!
- பப்ஜிக்கு அடிமையான மாணவர்.. கல்லூரித்தேர்வில் செய்த பரபரப்பு காரியம்!
- எழுதுறது 2 பேர்.. அத கண்காணிக்க 8 பேரா? இதென்னடா எக்ஸாம்க்கு வந்த சோதனை!
- மாணவியின் பொதுத் தேர்வுக்காக, பாட்டியின் இறுதிச் சடங்கை தள்ளிவைத்த உறவினர்!
- 10-ஆம் வகுப்பு தேர்வறையில் அதிகாரிகள் நடத்திய விதத்தால் மாணவி எடுத்த விபரீத முடிவு!
- முதல் முறையாக 600 மதிப்பெண்களுக்கு +2 தேர்வு: இன்று துவங்குகிறது!