'கொரோனவால் பாதித்த காஞ்சிபுரம் என்ஜீனியர்’... ‘டிஸ்சார்ஜ் குறித்து அப்டேட் கொடுத்த’... ‘சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காஞ்சிபுரம் பொறியாளர் இன்னும் 2 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக புதனன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ‘அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட கட்டாய பரிசோதனைகளின் முடிவுகள் கரோனாவால் பாதிக்கப்பட்டு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் குணமாகி இருப்பதைக்  காட்டுகின்றன. அவர் அடுத்தகட்ட சிகிச்சை நடவடிக்கைகளுக்கு பிறகு, இன்னும் ஓரிரு நாளில் மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்.

இது ஒன்றும் அதிசயம் இல்லை என்பதையும், தமிழக சுகாதாரத்துறையின் கடுமையான கண்காணிப்பு மற்றும் சிசிகிச்சை முறைககள்தான் இதற்கு காரணம் என்பதையும் நான் வலியுறுத்துகிறேன்’ இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

HOSPITAL, TWITTER, VIJABASKAR, HEALTH, MINISTER, TAMILNADU

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்