'குட் மார்னிங் மக்களே' ... இந்த நாளை இனிய நாளாக ஆரம்பித்து வைத்த சுகாதாரத்துறை அமைச்சர் ... 'கொரோனா' தமிழ்நாடு அப்டேட்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் இருப்பதாக சந்தேகத்தின் பேரில் பரிசோதனை செய்யப்பட்ட அனைவருக்கும் கொரோனா அறிகுறி இல்லை என தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

சீனாவில் ஆரம்பித்து பல உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி ஆயிரக்கணக்கான உயிரை பலி வாங்கியுள்ளது. இந்தியாவில் பெங்களூரு, கேரளா, டெல்லி, தமிழ்நாடு போன்ற பகுதிகளிலும் சில பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பது உறுதி செய்யபட்டது. இந்நிலையில் தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்து வந்த அனைத்து மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அனைத்தும் நெகடிவ் ரிப்போர்ட் ஆக வந்துள்ளன. தமிழக அரசு கொரோனா வைரசிலிருந்து விடுபட அனைத்து வித நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது' என பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவி இருந்த நிலையில் தமிழகத்தில் தற்போது யாருக்கும் கொரோனா வைரஸ் இல்லை என்ற சுகாதார துறை அமைச்சரின் ட்வீட் மூலம் தமிழக மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

 

CORONA VIRUS, VIJAYA BHASKAR, TAMILNADU

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்