'என்னாது இவங்க இப்ப கலெக்டர் இல்லயா?'..மாறிய அதிகாரிகள்.. எங்க. எந்த கலெக்டர்.. விபரம் உள்ளே!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் சென்னை, சேலம், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட முக்கிய மாவட்ட ஆட்சியர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனின் ஆணையின் பேரில் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
குறிப்பாக சேலம் மாவட்டத்தில் கடந்த வருடம் ஆட்சியராக பொறுப்பேற்ற ரோகினி, பரபரப்பாகவும், ஆக்டிவாகவும் இருந்ததாலும், தன்னுடைய தீராப் பணிகளாலும் அடையாளங் காணப்பட்டார். மக்களுக்கான நலத்திட்டங்கள் தொடங்கி, சம்பவங்கள், விபத்துகள், இயற்கைப் பேரிடர்கள், பெண் பாதுகாப்பு என எல்லாவற்றிலும் ஒரு ஆட்சியராக தனி கவனம் செலுத்தி வந்தார்.
இந்த நிலையில், அவர் தற்போது தமிழ்நாடு இசைப்பல்கலைக் கழகத்தின் பதிவாளராக பதவிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். எப்போதுமே ஆட்சியர்களுக்கு இந்த பணியிட மாற்றங்களும், பதவிமாற்றங்களும் சகஜம்தான் என்றாலும், அவருடைய சமூல நல பணிகளுக்கு தொடர்பில்லாத பணியாக இந்த நிர்வாகப் பணி இருக்கிறதோ என்கிற பேச்சுகளும் எழுந்துள்ளன.
தமிழ்நாடு இசைப்பல்கலைக் கழக பதிவாளராக, சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த ரோகிணி பதவிமாற்றம் செய்யப்பட்டுள்ள இந்த நிலையில், இதற்கு முன் இசைப் பல்கலைக் கழக பதிவாளராக, இருந்த சீதாலட்சுமி சென்னை மாவட்ட ஆட்சியராகவும், சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த சண்முக சுந்தரம் வேலூர் மாவட்ட ஆட்சியராகவும், வேலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த எஸ்.ராமன் சேலம் மாவட்ட ஆட்சியராகவும், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வினய் அரியலூர் மாவட்ட ஆட்சியராகவும், அரியலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த விஜயலட்சுமி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராகவும், மாநில தேர்தல் ஆணையச் செயலாளராக இருந்த டி.எஸ்.ராஜசேகர் மதுரை மாவட்ட ஆட்சியராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "24 மணி நேரம், 7 நாள்.. 'இது' ஓகே, ஆனா 'இது' கூடாது".. தமிழக அரசின் புதிய அரசாணை!
- 'இவ்ளோதானே.. இந்தா நிறைவேத்திடலாம்'.. சிறுமியின் கனவுக்கு அடித்தளமிட்ட கலெக்டருக்கு குவியும் பாராட்டுக்கள்!
- 'பேப்பர் வாங்க கூட கஷ்டம்'...ஆனா 'ஐ.ஏ.எஸ்' ...தேசத்தையே திரும்பி பார்க்க வைத்த 'பழங்குடி பெண்!
- இனி ‘இந்த வகையான ஷோ’ க்களை டிவி-யில் ஒளிபரப்ப தடை : உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி!
- பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் வெளியிட்ட எஸ்பி மீது ஒழுங்கு நடவடிக்கை: தமிழக அரசு!
- விங் கமாண்டர் அபிநந்தனுக்கு ‘பரம்வீர் சக்ரா’ விருது.. முதல்வர் கோரிக்கை!
- 1 மணி நேரத்துக்கு 5 ரூபாய்.. சென்னைக்கு வரவிருக்கும் வாடகை சைக்கிள்!