அடுத்த 'பத்து நாட்கள்' தமிழக எல்லைகளுக்கு சீல் ... அத்தியாவசிய வாகனங்களுக்கு மட்டும் அனுமதி ... கொரோனா தொற்றைத் தடுக்க தமிழக அரசின் லேட்டஸ்ட் அறிக்கை
முகப்பு > செய்திகள் > தமிழகம்கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேச மாநிலத்தின் அனைத்து எல்லைகளும் மார்ச் 31 ம் தேதி வரை மூடப்படவுள்ளதாக தமிழக அரசு அறிக்கை விட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தீவிரம் காரணமாக தமிழக அரசு மார்ச் 31 ம் தேதி வரை அனைத்து பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்கள் மூட வேண்டுமென அறிவுறுத்தியிருந்தது. மேலும் பொதுமக்கள் அதிகமாக ஒரே இடத்தில் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது தமிழகத்திற்கு கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேச மாநிலத்திலிருந்து இணைக்கப்படும் அனைத்து சாலைகளும் வரும் மார்ச் 31 வரை மூடப்படவுள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் அத்தியாவசிய பொருட்களான பால், பெட்ரோல், டீசல், காய்கறிகள், மருந்துகள் மற்றும் ஆம்புலன்ஸ் போன்றவற்றை ஏற்றி வரும் வாகனங்கள், இறப்பு போன்ற காரணங்களுக்காக பயணிக்கும் பயணிகளின் வாகனங்கள் ஆகியவற்றிற்கு மட்டுமே அனுமதி வழங்கப்படவுள்ளது. அது போக பொது மக்களின் அத்தியாவசிய நகர்வுகளுக்காக குறைவான எண்ணிக்கையில் அரசு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நாளான மார்ச் 22 அன்று பொது மக்கள் அனைவரும் சிறந்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு நாளான 22 ம் தேதி அன்று அரசு போக்குவரத்து கழகங்களின் பேருந்துகள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஓடாது எனவும், மெட்ரோ ரெயில்கள் சென்னையில் இயங்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து தனியார், அரசு நூலகங்களும் நாளை முதல் வரும் 31 ம் தேதி வரை மூடப்படவுள்ளதாகவும் தமிழக அரசு சார்பில் அறிக்கை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'எல்.கே.ஜி' முதல் 'ஐந்தாம்' வகுப்பு வரை ஸ்கூல் லீவ் .. 'வெளி மாநிலங்களுக்கு போகாதீங்க' ... தமிழக முதல்வர் வெளியிட்ட அறிக்கை
- 'விவசாயிகள் படை' சூழ ... மாட்டு வண்டி ஓட்டி வந்த 'முதல்வர்' ... விவசாயிகள் அளித்த 'காப்பாளன் பட்டம்'
- 'சேலத்தில்' விரைவில் 'ஐ.பி.எல்' போட்டி... தல 'தோனி' விளையாடுகிறார்...! "கேக்கவே நல்லாருக்குல்ல..."
- 'அப்டியே வராம, கொஞ்சம் அட்வான்ஸா திரும்பி வந்துட்டேன்னு சொல்லு', இது ஸ்மார்ட் வாடகை சைக்கிள்!
- தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர்களின் கல்வி எதிர்காலம் கேள்விக்குறியாகிறதா? அதிரடி அரசாணை!