இருக்குற ‘கடினமான’ சூழ்நிலையிலும்... ‘ஆயிரக்கணக்கான பேருக்கு’ புதிய வேலைவாய்ப்புகள்...! - அசத்தும் ‘தமிழக அரசின்’ புதிய ‘இணையதளம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு அமலிலுள்ள நிலையில், பொருளாதார நெருக்கடி காரணமாக பல தனியார் நிறுவனங்கள் ஊழியர்களை வேலையை விட்டு நிறுத்தி வைத்துள்ளது. இதன் காரணமாக பல கோடி பேர் இந்தியாவில் வேலையிழந்து திண்டாடி வருகின்றனர்.
இத்தகைய கடினமான சூழ்நிலையில், தமிழக அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட வேலைவாய்ப்பு போர்டல் மூலம் 6000 வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகளை வெளியிட வேண்டி மூன்று வாரங்களுக்கு முன் தமிழக அரசால் இந்த வேலைவாய்ப்பு இணையதளம் தொடங்கப்பட்டது.
சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மட்டுமில்லாது, அசோக் லேலண்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் உட்பட 440 நிறுவனங்கள் வரை தமிழக அரசின் வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்துள்ளன. மேலும் வேலை தேடும் 25,000 பேர் வரை, முழு நேர, பகுதி நேர மற்றும் பயிற்சி போன்ற பதவிகளில் வேலை வேண்டி விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஆட்டோ மொபைல், விவசாயம், உணவு பதப்படுத்துதல், எலெக்ட்ரானிக்ஸ், தகவல் தொழிநுட்பம் உட்பட பல பிரிவுகளில் 4000 ரூபாய் முதல் 50,000 வரை சம்பளத்திற்கான வேலைகள் குறித்த தகவல் இடம்பெற்றுள்ளது. இதில் பெரும்பாலான வேலை வாய்ப்புகள் ஓசூர் மற்றும் கோவை மாவட்டங்களில் அமைந்துள்ளன. அதனைத் தொடர்ந்து, சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் அமைந்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ’அதிக முதலீடுகளை ஈர்த்த மாநிலங்களில்... ’தமிழகம்’ தான் டாப்! ’லாக்டெளன்’ காலத்திலும்... வளர்ச்சி பாதையில் ’முன்னேறும்’ தமிழ்நாடு...!’ - ஆய்வு முடிவில் வெளியான தகவல்!
- இப்போதைக்கு 'வாய்ப்பில்ல'... 'தமிழக' முதல்வரின் அறிவிப்பால்... மகிழ்ச்சியில் ‘திக்குமுக்காடி’ போய் நிற்கும் 'கல்லூரி' மாணவர்கள்!
- "போடுறா 'வெடி'ய...!" - தமிழக ’முதலமைச்சருக்கு’ அமெரிக்காவிலிருந்து பறந்து வந்த ‘சர்வதேச’ கெளரவம்!
- VIDEO : சாத்தான்குளம் தந்தை - மகன் 'உயிரிழப்பு' விவகாரம்... 'சிபிஐ' விசாரிக்க தமிழக 'முதல்வர்' அதிரடி உத்தரவு!
- மாவட்டம் விட்டு 'மாவட்டம்' செல்ல... ஜூன் 30 வர வாய்ப்பில்ல... எல்லைகள் எல்லாம் 'closed'... தமிழக முதல்வர் உத்தரவு!
- தமிழகத்தில் 'பத்தாம்' வகுப்பு பொதுத் தேர்வுகள் 'ரத்து'... எந்த அடிப்படையில் 'மதிப்பெண்கள்' வழங்கப்படும்?... தமிழக 'முதல்வர்' அறிவிப்பு!
- தமிழகத்தில் '17' வெளிநாட்டு நிறுவனங்கள்... சுமார் 15 ஆயிரம் கோடிக்கு 'முதலீடு'... 'இத்தனை' பேருக்கு 'வேலை' கிடைக்குமாம்... தமிழக அரசின் செம 'பிளான்'!
- நம்ம நியாயமா 'கேள்வி' கேட்டா... 'எஜமானர்' மனசு 'கோணிடும்' பாருங்க... கமல்ஹாசனின் நேரடி 'அட்டாக்'!
- தமிழகத்தில் 'மே 31' வரை ஊரடங்கு நீட்டிப்பு... இந்த '25' மாவட்டங்களுக்கு மட்டும்... சில 'முக்கிய' தளர்வுகள் அறிவிப்பு!
- 'இந்த தேதியில இருந்து தெறக்கலாம்' அனுமதி அளித்த அரசு... என்னென்ன கட்டுப்பாடுகள்?