Breaking: நாளை முதல் இரவு எத்தனை மணி வரைக்கும் கடைகள் இயங்கலாம்...? - தமிழக அரசின் புதிய அறிவிப்பு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நெறிமுறைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது கடந்த மாதங்களாக மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி பல தளர்வுகளை அறிவித்திருந்தது.
ஏற்கனவே தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்துக் கடைகளும் இரவு 8 மணி வரை திறக்கலாம் என அறிவித்திருந்த நிலையில், தற்போது பண்டிகைக் காலம் என்பதால் இரவு 10 மணி வரை கடைகளை திறக்க அனுமதி அளித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் பொது மக்களுக்கும், கடைகளின் உரிமையாளர்களுக்கும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்ற தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
முதல்வர் வெளியிட்ட அறிக்கையில், 'மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
அதனால்தான் தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதோடு, சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவிகிதம் நாட்டிலேயே அதிகமாக உள்ளது. மேலும், நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிர் இழப்பும் குறைவாக இருந்து வருகிறது.
எதிர்வரும் பண்டிகை காலத்தினை கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் நாளை முதல் காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள், உணவங்கள் மற்றும் தேநீர் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் இயங்க அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் முகக்கவசம் அணிவதையும், குறைந்தது 6 அடி இடைவெளி கடைப்பிடிப்பதையும் அடிக்கடி சோப்பின் மூலம் கைகளை கழுவுவதையும், பொதுமக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்கவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.' இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
மற்ற செய்திகள்
'உயிர் தியாகம் செய்த காவலர்களுக்கு நினைவு கல்வெட்டு'... திறந்து வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!
தொடர்புடைய செய்திகள்
- 'சென்னையில் இரவில் வரும் கொள்ளையன்!'.. 'திருடும் முறையே இப்படித்தான்'.. சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட காவல்துறை!
- ‘தடையை மீறி மது.. பார்ட்டி..நடனம்!’.. கொத்தாக பிடிக்க போன போலீஸ்.. 12 பெண்கள் உட்பட அடுத்தடுத்து உயிரிழந்த 13 பேர் !
- ‘பல கனவுகளுடன் வந்த திருடன்!’.. அரண்டு போய் ஓடிய மொத்த நகைக்கடை ஊழியர்கள்!.. ‘புயலாக வந்த ஒரே ஒரு பெண் ஊழியர்!’.. தரமான சம்பவம்!
- 'இரவு விழித்திருந்து வேலை செய்வதில் இத்தனை நன்மைகளா!... 'ஆச்சரியம் தரும் ஆய்வு முடிவுகள்'...
- 'சென்னை மளிகை கடைக்காரருக்கு கொரோனா...' 'யாரெல்லாம் அவர் கடையில மளிகை சாமான்கள் வாங்கியிருக்காங்க...' தீவிர தேடுதல் வேட்டை...!
- ‘கொள்ளையடித்ததை’ வைத்து சொந்தமாக ‘நகைக்கடை’... 16 ‘நாட்கள்’ 400 கி.மீ. ‘பயணம்’, 460 ‘சிசிடிவிக்கள்’ சோதனை... ‘முடிவில்’ வெளிவந்த ‘திடுக்கிடும்’ தகவல்கள்...
- கோடிகளில் பணம்... சொகுசு வாழ்க்கை... கிளினிக்கில் நடந்த சோதனையில்... வெளியான அதிர்ச்சி சம்பவம்!
- ‘லட்சக்கணக்கில் கொள்ளை அடித்துவிட்டு’.. ‘சிசிடிவி ரெக்கார்டர் என நினைத்து’.. ‘கொள்ளையர்கள் செய்த காமெடி’..
- ‘டீ கடைக்காரரை ஓட ஓட விரட்டி வெட்டிய பயங்கரம்’.. ‘விசாரணையில் தெரியவந்த அதிரவைக்கும் காரணம்..’