வெங்காய விலை உயர்ந்ததை அடுத்து, குறைந்த விலையில் வெங்காயம் விற்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில், கனமழை காரணமாக விளைச்சல் குறைந்ததால், வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக வெங்காயம் விலை இரு மடங்காக உயர்ந்து கிலோ 60 முதல் 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சமையலில் முக்கிய பங்கு வகிக்கும், வெங்காயத்தின் விலை ஏற்றத்தால், பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, உணவங்களில், உணவுப் பொருட்களின் விலை உயரும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் வெங்காய விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுப்பதாக கூறியது. அதன்படி, சென்னை தேனாம்பேட்டையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, ‘வெங்காய விலையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. செயற்கையான விலையேற்றம் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
வெளிமாநிலங்களில் இருந்தும் பெரிய வெங்காயம் வாங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த பெரிய வெங்காயம் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும். இன்றிலிருந்து ரேசன் கடைகளிலும் பெரிய வெங்காயம் விற்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆந்திராவில் இருந்து கிலோ ரூ.30-க்கு பெரிய வெங்காயம் வாங்கப்பட்டு, கூட்டுறவு விற்பனை அங்காடிகள் (ரேசன்) மூலம் கிலோ ரூ.33-க்கு விற்கப்படும்’ என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். முதற்கட்டமாக சென்னையில் 200 ரேசன் கடைகளில் வெங்காயம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘9 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்’..
- 'அரசு வேலைக்கான ஆர்டர் வந்திருச்சு’... ‘நம்பிச் சென்ற இளம் தம்பதிக்கு’... 'சென்னையில் நடந்த பரிதாபம்'!
- ‘ஓடஓட விரட்டிய மர்ம நபர்கள்’... ‘பதறிப்போன கல்லூரி மாணவர்’... ‘பதைபதைக்க வைக்கும் சம்பவம்’!
- 'சென்னையில் அரசுப் பேருந்து உரசியதால்'... ‘கடை உரிமையாளருக்கு நேர்ந்த விபரீதம்’!
- ‘எங்கள தொட்டால்தான் ஆளாக முடியும்னு நினைச்சு’... ‘இப்படி எல்லாம் படத்துக்கு விளம்பரம் தேடுறாங்க!
- ‘அக்காவின் கணவரால் தங்கைக்கு நேர்ந்த கொடூரம்’... 'உறைந்துபோய் நின்ற குடும்பம்’!
- ‘பக்கத்து வீட்டில் வந்த அலறல் சத்தம்’... ‘ஓடிச் சென்று பார்த்த’... ‘பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி’!
- ‘லாரி மீது நேருக்கு நேர் மோதிய கார்’.. ‘முந்த முயன்றபோது நொடியில் நடந்த பயங்கர விபத்து’..
- வரதட்சணை கேட்டு மருமகளை தாக்கிய முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி..? பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்..!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!