"தெருவுல நிக்கிறேன்.. உதவி பண்ணுங்க".. முதல்வருக்கு கண்ணீருடன் பாட்டி வச்ச கோரிக்கை.. அடுத்த நாளே ஸ்பாட்டுக்கு போன அதிகாரிகள்.. நெகிழ வைக்கும் பின்னணி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வசிக்க வீடு இல்லாமல் கஷ்டப்படுவதாகவும் தனக்கு உதவி செய்யும்படியும் தமிழக முதல்வருக்கு கன்னியாகுமரியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் கோரிக்கை வைத்திருந்த நிலையில், அரசு அவருக்கு வீடு வழங்கியுள்ளது.
Also Read | "இப்படி ஒருத்தரை நான் பார்த்ததே இல்ல".. இந்திய இளைஞரை சந்தித்த எலான் மஸ்க்.. யாருப்பா இந்த பிரணாய்..?
புகைப்படம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்து இருக்கும் கீழகலுங்கடிப்பகுதியை சேர்ந்தவர் 91 வயதான வேலம்மாள் பாட்டி. கொரோனா சமயத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2000 ரூபாய் பணம் மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய பை வழங்கப்பட்டது. அப்போது முகம் மலர சிரித்தபடி வேலம்மாள் பாட்டி, பணத்தை பெற்றுச் சென்றார். இந்த புகைப்படம் அப்போது வைரலாக பரவியது. தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து 'இந்த ஏழைத் தாய்மார்களின் சிரிப்பே, நமது அரசின் சிறப்பு' எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும், இந்த புகைப்படத்தை எடுத்த கன்னியாகுமரியை சேர்ந்த ஜாக்சன் ஹெர்பி எனும் புகைப்பட கலைஞரை முதல்வர் ஸ்டாலின் நேரில் வரவழைத்து பாராட்டியிருந்தார்.
இதனை தொடர்ந்து, கன்னியாகுமரிக்கு முதல்வர் சென்றிருந்த நிலையில் தனக்கு வீடு வழங்கவேண்டும் என வேலம்மாள் மூதாட்டி கோரிக்கை வைத்திருந்தார். உடனடியாக உதவி செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் அப்போது அறிவித்திருந்தார்.
கோரிக்கை
இந்நிலையில், சமீபத்தில் வேலம்மாள் பாட்டி பேசிய வீடியோ ஒன்று வைரலானது. அதில் தான் தெருவில் நிற்பதாகவும், தனக்கு வீடு வழங்கும்படியும் பாட்டி கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், நாகர்கோவில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் வேலம்மாள் பாட்டியை நேரில் சந்தித்து அவருடைய குறைகளை கேட்டறிந்தார்.
அதை தொடர்ந்து, அவருக்கு தமிழக அரசு வீடு ஒன்றை ஒதுக்கியிருக்கிறது. அந்த வீட்டை பெற 75,000 ரூபாய் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதனை அறிந்த திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் பூதலிங்கம் மாவட்ட ஆட்சியாளர் அரவிந்திடம் அந்த தொகையை செலுத்தியிருக்கிறார். இதன்படி வேலம்மாள் பாட்டியிடம் அதற்கான பத்திரம் வழங்கப்பட்டது. அதனை கண்ணீருடன் பட்டி வாங்கிக்கொண்ட புகைப்படம் சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
Also Read | 431 ஊழியர்களுக்கும் போனஸ்.. 'Boss' சொன்ன அதிரடி அறிவிப்பு.. "எல்லாத்துக்கும் அந்த ஒரு விஷயம் தான் காரணமாம்"
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப்போகிறோம்".. முதல்வர் முக ஸ்டாலின் அதிரடி ட்வீட். முழு விபரம்..!
- "6 வருஷமா என்ன பிரச்சனைனு கூட தெர்ல".. அரியவகை நோயினால் பாதிக்கப்பட்ட சிறுமி முதல்வருக்கு வச்ச கோரிக்கை.. அடுத்தநாளே அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு..!
- முதல்வர் கைகளால் "தகைசால் தமிழர் விருது" பெற்ற தோழர் நல்லகண்ணு.! விருது பெற்ற கையோடு சுதந்திர தின மேடையிலேயே கொடுத்த சர்ப்ரைஸ்!
- "மனைவி போன் எடுக்கமாட்டேங்குறா.." வெளிநாட்டில் இருந்து பதற்றத்தில் அழைத்த கணவர்.. ஓடி போய் பாத்த உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
- "நான் Soft முதல்வர் என யாரும் நினைக்க வேண்டாம்".. ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அதிரடி.. முழு விபரம்..!
- Chess Olympiad 2022 நிறைவு நாள்.. சிவமணியுடன் சேர்ந்து டிரம்ஸ் வாசித்து பார்த்த முதல்வர்..
- ISRO-க்கு அரசுப் பள்ளி மாணவர்கள் செஞ்ச முக்கிய ஹெல்ப்.. அமைச்சர் நேரில் வாழ்த்து..!
- "என் பெயரை நெஞ்சுல பச்சை குத்தி.. காதலை நிரூபிச்சு காட்டு".. காதலிக்கு கண்டீஷன் போட்ட காதலன்.. கையில் காப்பு மாட்டிய காவல்துறை..!
- "சென்னை நினைவுகள்.. மறக்க முடியாத பயணம்".. நன்றி தெரிவித்து பிரதமர் மோடி பகிர்ந்த நெகிழ்ச்சியான வீடியோ..!
- தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பா..? சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கொடுத்த விளக்கம்..!