ராஜேந்திர பாலாஜிக்கு சிக்கல்... பிடியை இறுக்கிய தமிழக அரசு... உச்சநீதிமன்றத்தில் வைத்த செக்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழ்நாடு அரசு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

Advertising
>
Advertising

கே.டி. ராஜேந்திர பாலாஜி கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்தார். ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி சுமார் 3 கோடி ரூபாயை மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக ராஜேந்திர பாலாஜி முன் ஜாமீன் மனு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி தள்ளுபடி செய்தது.

இதையடுத்து ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்படுவார் என்ற பரபரப்பு எழுந்தது, அவர் கடந்த வெள்ளிக்கிழமை (டிச.17)  அதிமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். ஆனால் அதன்பின்னர் அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்த தகவல் இல்லை என்று சொல்லப்படுகிறது. இதையடுத்து ராஜேந்திர பாலாஜியை பிடிப்பதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள்  ராஜேந்திர பாலாஜியின் வீடு, உறவினர்கள் வீடு, நண்பர்கள் வீடுகளில் தேடினார்கள்.

600 பேர் எண்கள்

ராஜேந்திர பாலாஜியுடன் போனில் பேசிய 600 பேரின் எண்களை வைத்து  போலீஸார் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர்கள்  கேரளா, கொடைக்கானல், கோவைக்கு விரைந்துள்ளனர். ராஜேந்திர பாலாஜி பெங்களூருவில் இருக்கலாம் என்ற தகவலின் பெயரில் ஒரு தனிப்படை அங்கும் முகாமிட்டுள்ளது.

முன்ஜாமின் மனு

ராஜேந்திர பாலாஜியை பிடிக்க 8 தனிப்படைகள் தீவிரமாக உள்ளன. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி முன் ஜாமீன் மனுவை தாக்கல் செய்திருந்தார். இதனிடையே அவரது இருப்பிடம் குறித்து அவரது உறவினர்களிடம் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்றைய முன் தினம் புதியதொரு முன் ஜாமின் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

கேவியட் மனு

ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று விடாமல் இருக்க முதலில் லுக்-அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தற்போது உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் கேவிய்ட மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ராஜேந்திர பாலாஜியின் ஜாமின் மனு எப்போது விசாரணைக்கு வந்தாலும் தமிழ்நாடு அரசின் வாதத்தைக் கேட்காமல் வழக்கு நடைபெறாது. இதனால், ராஜேந்திர பாலாஜிக்கு அடுத்து ஜாமின் கிடைப்பது எளிதாக இருக்காது.

TAMILNADUPOLICE, RAJENDRA BALAJI, TAMINADU GOVERNMENT, CAVEAT PETITION, தமிழக அரசு, ராஜேந்திர பாலாஜி, கேவியட் மனு

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்