'வாரச்சந்தை, பெரிய ஜவுளிக் கடைகள், நகைக் கடைகளும்’... 'நாளை முதல்'... 'தமிழக அரசு பிறப்பித்த புது உத்தரவு'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் பெரிய வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் ஏசி வசதி கொண்ட பெரிய ஜவுளி, நகைக்கடைகள், பெரிய கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக இன்று தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில், தமிழகத்தில் மார்ச் 31-ம் தேதி வரை அனைத்து வாரச்சந்தைகளை மூட வேண்டும். தவிர பெரிய ஜவுளிகடைகள், பல்பொருள் அங்காடிகள், பெரிய நகை கடைகள் ஆகியன நாளை முதல் மார்ச் 31-ம் தேதி வரை மூட வேண்டும். ஆனால் அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள், பல்பொருள் அங்காடிகள், காய், கனி கடைகள், மருந்தகங்கள், உணவகங்கள் வழக்கம் போல் திறந்திருக்கும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ராமேஸ்வரம் கோயில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில், தஞ்சை பெரிய கோயில் ஆகிய கோயில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். அனைத்து மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு மருத்துவமனைகளை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்