தமிழக மீனவருக்கு அடிச்ச ஜாக்பாட்.. வலையில் சிக்குன ராட்சத அதிர்ஷ்டம்!.. விலை மட்டும் எவ்வளவு தெரியுமா?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் மிகவும் அரிய யானை திருக்கை மீனை பிடித்திருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

Advertising
>
Advertising

மீன்பிடி தடைக் காலம்

தமிழக கடலோரப் பகுதியில் சுற்றுச் சூழலை பாதுகாக்கவும் மீன் இனப்பெருக்கத்திற்காகவும் தமிழக அரசு ஆண்டு தோறும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி இரவு வரை மீன் பிடிப்பதற்கு தடை விதிப்பது வழக்கம். இந்த காலத்தில் விசைப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதில்லை. ஆனால் இந்த தடை காலத்திலும் நாட்டுப் படகில் மீனவர்கள் கடலுக்கு செல்வது வழக்கம்.

அதன்படி பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து 100க்கும் அதிகமான நாட்டுப் படகில் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர்.


யானை திருக்கை மீன்

இந்நிலையில் பாம்பன் பகுதியில் இருந்து மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் தன்னுடைய வலையில் பெரிய மீன் ஒன்று மாட்டி இருப்பதை உணர்ந்து இருக்கிறார். துரிதமாக செயல்பட்டு லாவகமாக உள்ளே இருக்கும் மீனை அவர் வெளியே எடுத்தபோது சந்தோஷத்தில் அவர் துள்ளி குதித்திருக்கிறார். அதற்கு காரணம் அவரது வலையில் சிக்கி இருந்தது ராட்சத யானைத் திருக்கை மீன் ஆகும்.

600 கிலோ

இந்த மீன் 8 அடி அகலத்தில் 600 கிலோ எடை இருந்ததாக அந்த மீனவர் தெரிவித்திருக்கிறார். பொதுவாக இந்த வகையான திருக்கை மீன் கருவாடு செய்வதற்கு அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் சுவை மற்றும் ஆரோக்கியம் காரணமாக இந்த மீனுக்கு மார்க்கெட்டில் நல்ல வரவேற்பும் இருக்கிறது.

இந்நிலையில் மன்னார் வளைகுடாவில் பிடிக்கப்பட்ட இந்த ராட்சத யானைத் திருக்கை மீனை வியாபாரி ஒருவர் 54 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார். பாம்பன் பகுதி மீனவரின் வலையில் 600 கிலோ எடையுள்ள ராட்சத யானைத் திருக்கை மீன் சிக்கியது அப்பகுதி மீனவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

 

 

FISH, PAMBAN, RAREFISH, TAMILNADU, மீன், யானைதிருக்கைமீன், தமிழ்நாடு

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்