'இந்தப் புள்ளைக்கா இப்படி நடக்கணும்’... ‘முன்னாள் எம்.எல்.ஏ மகனுக்கு’... ‘நொடியில் நடந்த கோரம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மீன் பண்ணையில் மீன்களுக்கு உணவு அளித்துவிட்டு வீட்டிற்குச் சென்ற முன்னாள் எம்.எல்.ஏ வின் மகன் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அரியலூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த ராமதேவநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ ராஜேந்திரன். இவரது மகன் ராஜ் கமல் (30). இவருக்குத் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகின்றன. குழந்தைகள் இல்லை. இவர், தனது தோட்டத்து வீட்டில் உள்ள வயல்பகுதியில் மீன் பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இந்தநிலையில் மீன்களுக்கு இரை கொடுத்துவிட்டு இன்று அதிகாலை ராஜ் கமல் தனது காரில் பண்ணையிலிருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். 

வீட்டின் அருகே வந்தபோது காரின் டயர் வெடித்து பயங்கர சத்தத்துடன் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. நொடிப்பொழுதில் நடந்த இந்த விபத்தில், படுகாயமடைந்த ராஜ் கமலை அருகிலிருந்த மக்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

`அமைதியான இந்தப் பிள்ளைக்கா இப்படி நடக்கணும்’ என்று அப்பகுதி மக்கள் நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுத சம்பவம் பார்ப்போரைக் கண்கலங்க வைத்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  விபத்து குறித்து மீன்சுருட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்