ரூ‌. 1000 உரிமை தொகை.‌. நகை கடன் தள்ளுபடி சான்றிதழ்.. திடீரென வேகம் எடுக்கும் திமுகவின் அரசியல் டிராக்?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக என அனைத்து கட்சிகள், சுயேட்சைகள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் இறங்கியுள்ளனர். அதிரடி வாக்குறுதிகள், அனல் பறக்கும் விவாதங்கள் என தேர்தல் களம் செம்ம சூடு பிடித்துள்ளது.

Advertising
>
Advertising

ரயில்வே டிராக்கில் இருசக்கர வாகனத்துடன் சறுக்கிய நபர்..100 கிமீ வேகத்தில் வந்த ரயில்.. கதிகலங்கும் வீடியோ..!

தேர்தல்

சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி 28-ம் தேதி தொடங்கி ஏற்கனவே நிறைவு பெற்றது. தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 74 ஆயிரத்து 416 வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கேள்வி - பதில்

இந்நிலையில் தமிழக ஆளுங்கட்சியான திமுகவின் வாக்குறுதிகளை குறித்து பாஜக வேட்பாளர்கள் மற்றும் தலைவர்கள் சரமாரி கேள்வி எழுப்பி வருகின்றனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவை மாவட்டத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது, இஸ்திரி போட்டும், வேறு இடத்தில் தோசை சுட்டும் மக்களிடம் வாக்கு கேட்டது அப்போது வைரலானது.

இந்நிலையில், நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் ஆட்சியைப் பிடித்த ஸ்டாலின் தலைமையிலான திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் நகைக் கடன் தள்ளுபடி, மகளிருக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இத்திட்டங்கள் அனைத்து பகுதி மக்களையும் சென்றடையவில்லை என எதிர் கட்சியினர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

ஊரக உள்ளாட்சி தேர்தல் என்பதால் திமுக-விற்கு எதிரான அரசியல் ஆயுதமாக பாஜக இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. இதுகுறித்து பேசிய தமிழக பாஜக தலைவர் `தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி தி.மு.க அரசு, நகைக் கடன் தள்ளுபடி செய்யாதது ஏன்? குடும்பப் பெண்களுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை அளிக்காதது ஏன்?' என கேள்வி எழுப்பினார் .

ஸ்டாலின் பதில்

இதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின்,'மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் என்ற மகளிர் உரிமைத் தொகையை விரைவில் வழங்கப்போகிறோம். நாங்கள் யாரையும் ஏமாற்றப்போவதில்லை. இந்த ஸ்டாலின் ஒரு வாக்குறுதி கொடுத்தால், அதை நிச்சயம் நிறைவேற்றுவான். இது தமிழ்நாட்டு தாய்மார்களுக்கு நன்றாகத் தெரியும்' என அதிரடியாக பதில் அளித்திருக்கிறார்.

கடன் சுமை

"தமிழக அரசின் கஜானா காலியாகிவிட்டது. தமிழக அரசின் கடன்சுமை 5 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது" என தமிழக நிதி துறை அமைச்சர் சட்ட சபையில் வெள்ளை அறிக்கை வெளியிட்டுப் பேசினார். இதனால், பல திட்டங்களை செயல்படுத்த அரசு தயக்கம் காட்டிவந்த நிலையில் மீண்டும் 'மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் என்ற மகளிர் உரிமைத் தொகையை விரைவில் வழங்கப்போகிறோம்' என ஸ்டாலின் அறிவித்திருப்பது பொதுமக்கள் இடையே வைரலாகி இருக்கிறது.

தேர்தல் காலம் என்பதால் இந்த திட்டம் குறித்து திமுக மீண்டும் பேசத் தொடங்கியுள்ளதா? இதுவரையில் இத்திட்டங்களை செயல்படுத்த எவ்வித முயற்சியையும் எடுக்காதது ஏன்? என்ற குற்றச்சாட்டுகளும் எதிர்த் தரப்பில் கிளம்பியுள்ளன. உண்மையாகவே, இந்த விஷயத்தில் ஒரு முடிவு எட்டப்பட்டு பொதுமக்கள் எதிர்பார்த்தபடி அனைவருக்கும் உதவித் தொகை மாதாமாதம் கிடைத்திட வேண்டும் என்பதே சாமானிய மக்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

வீட்டுக்குள் தோண்டப்பட்ட 'குழி'.. கதவைத் திறந்ததும் ஆடிப் போன அண்ணன்.. தூங்கியதால் சிக்கிய 'தம்பி'

TAMILNADU ELECTIONS, DMK, GOLD LOAN, நகை கடன் தள்ளுபடி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்