தமிழக சட்டமன்றத்துக்குள் நுழைகிறதா பாஜக?.. முக்கிய தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை!.. அனல் பறக்கும் தேர்தல் முடிவுகள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக முக்கிய தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

தமிழக சட்டமன்றத்துக்குள் நுழைகிறதா பாஜக?.. முக்கிய தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை!.. அனல் பறக்கும் தேர்தல் முடிவுகள்!

2021 தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

காலை 10.45 நிலவரப்படி, அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 5 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

சென்னை துறைமுகம் தொகுதியில், பாஜக வேட்பாளர் வினோஜ் பி. செல்வம் 3,142 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் சேகர் பாபுவை விட முன்னிலையில் இருக்கிறார்.

அதே போல, தமிழக பாஜக தலைவர் எல். முருகன், தாராபுரம் தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார்.

மேலும், நெல்லை தொகுதியில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் இருக்கிறார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்