மேலே போறது '400 KV' 'கரண்ட்' .. ஆஃப் பண்ணாமல் வேலை பார்த்த மின் ஊழியர்.. ராஜேஷ் லக்கானி விளக்கம்..
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தைப் பொறுத்தவரையில், மழை, புயல் என எந்த காலத்திலும் மின்சாரத் துண்டிப்பு ஏற்பட்டால், அதனை மின் ஊழியர்கள் மிகுந்த ஆபத்தான சூழலில் தான் சரி செய்து வருகின்றனர்.
அது மட்டுமில்லாமல், இயல்பான கால நேரத்திலும், மின்வாரிய ஊழியர்கள் தங்களது உயிரைப் பயணம் வைத்துத் தான் பணிபுரிந்து வருகின்றனர். இதன் காரணமாக, சில உயிரிழப்புகள் ஏற்பாடாமலும் இருந்ததில்லை.
இந்நிலையில், தமிழக மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, தனது ட்விட்டர் பக்கத்தில், மின்வாரிய ஊழியர் ஒருவர், மின்சாரத்தைத் துண்டிக்காமலேயே, ஏணி ஒன்றை வைத்துக் கொண்டு, பணிபுரியும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். '400KV (4,00,000 Volts) Supply Voltage ஐ OFF செய்யாமல் நமது தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் பணி செய் அற்புதமான காட்சி' எனவும் குறிப்பிட்டிருந்தார். இதனைக் கண்ட நெட்டிசன்கள், சற்று குழப்பமடைந்தனர். அப்போது கமெண்ட்டில், 'ஏன் சார் இவ்வளவு ஆபத்தான வேலை?. உண்மையில் எனக்கு இந்த சாகசம் ஏன் என்று புரியவில்லை?' என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த ராஜேஷ் லக்கானி, 'அந்த ஊழியர் நோமெக்ஸ் அராமிட் மற்றும் மைக்ரோஸ்கோபிக் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மூலம் உருவான சூட் ஒன்றை அணிந்துள்ளார். இது நெருப்பு மற்றும் மின்சாரத்தில் இருந்து அவரைக் காத்துக் கொள்ள உதவும். இதனால் ஷாக் ஒன்றும் அடிக்காது. இந்த பாதுகாப்பு உபகரணத்தின் மூலம் பல லட்ச ரூபாய் வரை சேமிக்கலாம்' என குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மின்வாரியம், அதன் ஊழியர்களுக்கு பாதுகாப்பான உபகரணம் அளித்துள்ளதை பலரும் பாராட்டி வரும் நிலையில், மேலும் சிலர் இது அவர்களுக்கு எந்த அளவிற்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்பதையும் தெளிவாக சோதனை செய்ய வேண்டும் என தங்களது கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இருட்டெல்லாம் பார்த்தா 'தொழில்' பண்ண முடியுமா...? திருடப்போனவர்களுக்கு 'கிடைத்த' மறக்க முடியாத பரிசு...!
- 'சென்னை மக்களே நாளை பல்வேறு இடங்களில் மின் வினியோகம் நிறுத்தம்'... 'Work From Home' பண்றவங்க பிளான் பண்ணிக்கோங்க'... முழு விவரம்!
- ‘இந்த 6 மாவட்டங்களுக்கு’ மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு!.. அதிரடியாக அறிவித்த தமிழ்நாடு மின்சார வாரியம்!
- 'கரண்ட் பில் கட்ட நேர்ல வராதீங்க...' 'போன மாச பில்லுல டிஃபரன்ஸ் இருக்குன்னா....' கொரோனா வைரஸ் பரவுவதால் மின்சார வாரியம் தீடீர் அறிவிப்பு.
- "இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்குக் காத்திருக்கும் அரசு வேலை!"... "அப்ளை பண்ணீட்டீங்களா?"...
- ‘நாளை (ஜனவரி 3, 2020) சென்னை-யில் இங்கெல்லாம் பவர் கட்!’.. உங்க ஏரியாவும் இருக்கானு செக் பண்ணிக்கங்க!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- 'உங்க ஏரியாவில் மழையால் பவர்கட்டா?'... '24 மணிநேரமும் தடையின்றி’... ‘இந்த நம்பர்களில் புகார் தெரிவிக்கலாம்’... விவரம் உள்ளே!
- 'தொடரும் சோகம்'...'அலட்சியத்தால் போன இளைஞரின் உயிர்'...தாம்பரத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
- 'புதிய இணைப்பிற்கு உயரும் கட்டணம்'...'லைன்மேன் வந்தா அதுக்கும் கட்டணம்'...வரப்போகும் அதிரடி!