‘யாரும் பீதியடைய வேண்டாம்’.. ‘இந்த ரெண்டு விஷயம் போதும் கொரோனாவ விரட்ட’.. நம்பிக்கை தரும் மருத்துவர்கள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா வைரஸ் குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கி 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கொரோனா வைரஸ் மக்களிடையே பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதன்காரணமாக வீட்டின் அருகே உள்ளவர்கள் யாருக்கேனும் லேசான காய்ச்சல், இருமல் போன்றவை இருந்தால் கொரோனா தொற்று இருக்குமோ என்ற அச்சத்தில் அவர்களை ஒதுக்கிவைக்கும் நிலை சில இடங்களில் நடைபெற்று வருகிறது.

பல்வேறுவகையான வைரஸ் காரணமாக மனிதர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் போன்றவை ஏற்படுகிறது. கொரோனாவில் உள்ள novel corona என்ற வைரஸால் மட்டுமே நோய்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போதைய சூழலில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை தவிர யாருக்கேனும் இருமல், காய்ச்சல் இருந்தால் உடனடியாக அச்சப்பட வேண்டியதில்லை என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று ஏற்படுவதை தவிர்க்க கைகளை சுத்தமாக வைத்திருக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதனால் Hand sanitizer-ஐ மக்கள் அதிகமாக வாங்க வருவதால், அதற்கு தட்டுபாடு ஏற்பட்டு விலையும் அதிகரித்துள்ளது. ஆனால் கைகளை கழுவ Hand sanitizer கட்டாயம் தேவையில்லை எனவும், வீட்டில் உள்ள சோப்பைக் கொண்டே கைகளை கழுவலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அனைவரும் முககவசம் அணிய வேண்டிய கட்டாயமில்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர். மன உறுதி, விழிப்புணர்வு இந்த இரண்டு இருந்தாலே கொரோனா தொற்றை விரட்டியடிக்கலாம் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

News Credits: Polimer News

CORONAVIRUSINDIA, CORONAVIRUSUPDATE, COVID, DOCTORS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்