மிரட்டும் கொரோனா 2வது அலை!.. தமிழகத்தின் மாஸ்டர் பிளான் 'இது' தான்!.. விரிவான தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமெடுத்து வருவதை அடுத்து, சுகாதாரத்துறை சார்பாக பல அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
கொரோனா தடுப்பூசி போடுவதை மினி கிளினிக்குகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு விரிவுபடுத்தவும், தடுப்பூசி போட விருப்பம் தெரிவிக்கும் தனியார் மருத்துவமனைகளைச் சேர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா சோதனைகளை அதிகப்படுத்தவும், தடுப்பூசி இயக்கத்தை விரிவுபடுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா சோதனைகளை அதிகப்படுத்த மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டது. நோய்த்தொற்று உறுதியானோருக்குத் தேவையான மருத்துவம் அளிக்கவும், அவர்களுடன் தொடர்பில் உள்ளோருக்குத் தொற்றுள்ளதா எனக் கண்டறிய சோதனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், "மினி கிளினிக்குகள், ஆரம்ப சுகாதார மையங்கள் தவிர, கொரோனா தடுப்பூசி போடுவதற்கென பிரத்யேக தடுப்பூசி மையங்கள் உருவாக்கப்படும்" என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய தமிழக அரசு தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், "சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து நோய்த் தொற்று மேலும் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.
மற்ற செய்திகள்
'ஒரு வருஷத்துல சுங்க சாவடிகளே இருக்காது'... 'ஆனா பணம் வசூலிக்க மற்றோரு முறை'... நிதின் கட்கரி தகவல்!
தொடர்புடைய செய்திகள்
- வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை!.. 3 நாட்கள் லீவ்!!.. அமலுக்கு வந்தது புதிய நடைமுறை!.. அதிரடி காட்டும் நாடு!.. 'இது நமக்கும் செட் ஆகுமா'?
- மீண்டும் தலைதூக்கும் கொரோனா!.. தீர்வு தான் என்ன?.. பிரதமர் மோடி முதலமைச்சர்களிடம் தெரிவித்த அதிர்ச்சி தகவல்!
- 'தீயா பரவிட்டு இருக்கு மக்களே...' 'இதுக்கு மேலையும் கவனக்குறைவா இருக்க கூடாது...' 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' 'தமிழகத்தின் இன்றைய கொரானா அப்டேட்...' - முழு விவரம்...!
- தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா? - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பதில்...!
- 'தமிழகத்தில் பள்ளிகள் தொடர்ந்து நடைபெறுமா'?... கல்வித்துறை அதிகாரிகள் விளக்கம்!
- 'லாக்டவுன் போடுறது மட்டும் தான் ஒரே ஆப்ஷனா'?... 'இதை ஏன் நாம முயற்சிக்க கூடாது'?... 'ஆனந்த் மகேந்திரா' சொன்ன சூப்பர் ஐடியா!
- 'அதிகரிக்கும் கொரோனா'... 'ரொம்ப எச்சரிக்கையா இருங்க மக்களே'... 'மாஸ்க் அணியாவிட்டால் அபராதம்'... தமிழக அரசு!
- 'பயமுறுத்தும் எண்ணிக்கை'...'தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா'?... 'தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்' அவசர ஆலோசனை!
- பாய்ச்சல் எடுக்கும் கொரோனா... நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகும் எண்ணிக்கை... மக்களே, இனிமே தான் நாம உஷாரா இருக்கனும்! - முழு விவரம் உள்ளே!
- 'என்ன மக்களே, மாஸ்க் வேண்டாம்ன்னு முடிவு பண்ணிட்டோமா'?... 'தமிழகத்தில் ஒரே வாரத்தில் அதிர்ச்சி அளித்த ரிப்போர்ட்'... அலட்சியம் காரணமா?