சென்னை முதல் நாகர்கோவில் வரை.. மொத்தமாக மாநகராட்சிகளை தூக்கும் திமுக? ஸ்டாலினுக்கு கிடைத்த பெரும் வெற்றி
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், கடந்த 19 ஆம் தேதியன்று நடைபெற்றிருந்தது. மொத்தம் 61 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வந்தது.
"மாமியார் - மருமகள் காம்போ'னா இப்டி இருக்கனும்.." விருதுநகரில் திரும்பி பார்க்க வைத்த தேர்தல் முடிவு
தமிழகம் முழுவதும் 279 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்தே பெரும்பாலான இடங்களில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தான், அதிகம் வெற்றி பெற்று வருகிறது.
இந்நிலையில், 21 மாநகராட்சிகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், அனைத்து மாநகராட்சிகளையும் திமுக கைபற்றியுள்ளது. 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியுள்ள திமுக, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றியும் பெற்றுள்ளது.
சென்னை மாநகராட்சியில், மொத்தமுள்ள 200 வார்டுகளில் இதுவரை தேர்தல் முடிவுகள் வெளியானதன் அடிப்படையில், 110 வார்டுகளுக்கு மேல், திமுக வென்று, சென்னை மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது.
நாகர்கோவில் மாநகராட்சியில் மொத்தம் 52 வார்டுகள் உள்ள நிலையில், திமுக 32 வார்டுகளிலும், அதிமுக 7 வார்டுகளிலும், பாஜக 11 வார்டுகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ள நிலையில், 50 வார்டுகளுக்கு மேல் வென்ற திமுக, கோவை மாநகராட்சியை கைப்பற்றியது.
கடலூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 45 வார்டுகளில், 27 வார்டுகளில் திமுக கைப்பற்றி அசத்தியுள்ளது.
சிவகாசி மாநகராட்சி (மொத்தம் 48 வார்டுகள்) - திமுக 24 இடங்களை கைப்பற்றி வென்றுள்ளது.
சேலம் மாநகராட்சி நிலவரம்: 32 இடங்களில் திமுக வென்றுள்ளது.
இதே போல, மற்ற அனைத்து மாநகராட்சிகளிலும், பாதிக்கு மேற்பட்ட தொகுதிகளை திமுக வென்றுள்ளதால், 21 மாநாகராட்சிகளும் வசமாகியுள்ளது. இந்த மகத்தான வெற்றியினால், திமுக தொண்டர்களும் மிகுந்த உற்சாகத்தில், தங்கள் கட்சியின் வெற்றியினை கொண்டாடி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சத்தமில்லாமல் தமிழகத்தில் முதல் வெற்றியை பதிவு செய்த ஓவைசி கட்சி.. எங்கு தெரியுமா..?
- தேர்தல் முடிவுகள் : 22 வயசு தான்.. ஜெயிச்சு தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த சென்னை பெண் .. யாருப்பா இவங்க?
- எஸ்பி வேலுமணியின் சொந்த தொகுதியை கைப்பற்றிய திமுக - செந்தில் பாலாஜியின் ஆப்பரேஷன் சக்ஸஸ்..!
- தேர்தல் முடிவுகள் : முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வசிக்கும் வார்டை கைப்பற்றிய திமுக
- ஒரே வாக்கில் மாறிய முடிவு.. பாஜக வேட்பாளர் அசத்தல் வெற்றி
- பேரூராட்சி தேர்தல் முடிவுகள்: திமுகவுக்கு டஃப் கொடுக்கும் அதிமுக.. பரபரக்கும் கள நிலவரம்
- அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது.. திமுக நிர்வாகி தாக்கப்பட்ட வழக்கில் போலீசார் நடவடிக்கை..!
- திமுகவுக்கு பிரச்சாரம் செய்த ருமேனியா நபர்.. நேரில் ஆஜராக மத்திய அரசு உத்தரவு.. சிக்கலில் தவிக்கும் வெளிநாட்டு தொழிலதிபர்
- "பொண்ணுங்க மட்டும் ஏன் டிக்கெட் எடுக்கல".. "அட.. வேர்ல்டுல எங்கயும் இப்படி இல்ல".. ருமேனியர் எடுத்த பரபரப்பு முடிவு
- ரூ. 1000 உரிமை தொகை.. நகை கடன் தள்ளுபடி சான்றிதழ்.. திடீரென வேகம் எடுக்கும் திமுகவின் அரசியல் டிராக்?