வெளிநாட்டுல கஷ்டப்பட்டே 'வாழ்க்கை' போயிடும்னு நெனச்சேன்! கட்டடத் தொழிலாளிக்கு 'கூரையை' பிய்த்துக்கொண்டு விழுந்த அதிர்ஷ்டம்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

‘அது இஷ்டம் போல வருவதால் அதிர்ஷ்டமுன்னு பேருங்க’ என்று பிரபுதேவாவின் ஹிட் பாடல் வரி ஒன்று உண்டு. அப்படி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் தொழிலாளி ஒருவருக்கு அது இஷ்டத்தில் அதிர்ஷ்டம் அடித்துள்ளது. ஒன்றல்ல, இரண்டல்ல இருபது கோடி ரூபாய் தொகையை வென்று ஜாக்பாட் அடித்துள்ளார் அமீரகத்தில் இருக்கும் தமிழக தொலாளி.

Advertising
>
Advertising

அரியலூர் மாவட்டத்தில் எளிய குடும்பத்தில் பிறந்தவர் தினகர். அவர் கட்டிட தொழில் கற்றுக் கொண்டு ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்று அதே வேளையைப் பார்த்து வந்துள்ளார். உலகையே இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தன் பிடியில் வைத்து ஆட்டிப்படைத்து வரும் கொரோனா காலக்கட்டத்தில் கூட ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர்ந்து வேலை செய்து வந்தார் தினகர். அப்படி அவர் செய்யும் பணி மூலம்தான் தமிழகத்தில் அவரது குடும்பத்துக்கு வருமானம் கிடைத்து வந்தது.

ஐக்கிய அரபு அமீரகத்தைப் பொறுத்தவரை லாட்டரி சீட்டில் தங்களுக்கும் பரிசு விழும் என்று நம்புபவர்கள் ஆன்லைனில் லாட்டரி  டிக்கெட்டுகளை வாங்கி தங்களது அதிர்ஷ்டத்தை சோதித்துக் கொள்வார்கள். இதைப் பார்த்த தினகருக்கு தானும் லாட்டரி சீட்டு வாங்க வேண்டும் என்கிற ஆசை எழுந்தது. இதைத் தொடர்ந்து மிகுந்த நம்பிக்கையுடன் ஆன்லைனில் லாட்டரி டிக்கெட் வாங்கியுள்ளார் தினகர்.

அவர் வாங்கிய லாட்டரி சீட்டு குலுக்கல் நாளில் ஆவலோடு முடிவுகளை எதிர்பார்த்துக் காத்திருந்தார். அவர் சற்றும் எதிர்பாராத விதமாக ஜாக்பாட் பரிசு கிடைத்தது. தினகர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு அந்த நாட்டு மதிப்பில் 1 கோடி திர்ஹாம் பரிசு விழுந்தது.

இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 20 கோடி ரூபாய் இருக்கும் எனக் கணக்கிடப்பட்டு உள்ளது. இப்படிப்பட்ட அதிர்ஷ்டம் கோடியில் ஒருவருக்கும் வாழ்நாளில் ஒரேயொரு முறைதான் கிடைக்கும் என்பதை தினகர் உணர்ந்து மகிழ்ச்சியில் பரவசமடைந்து உள்ளார். இது குறித்த தகவலை அரியலூரில் உள்ள தனது குடும்பத்துக்கும் தெரிவித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.

இந்த குபீர் லக் குறித்து தினகர், ‘நான் வாழ்நாளில் வாங்கிய முதல் லாட்டரி சீட்டு இது தான். முதல் முறையிலேயே எனக்குப் பரிசுத் தொகை கிடைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. என் சொந்த ஊரில் விரைவில் விவசாய நிலம் வாங்க உள்ளேன். அதில் விவசாயம் செய்வதே எனது ஆசை’ என்று எதிர்காலத் திட்டம் குறித்து உற்சாகம் ததும்ப கூறுகிறார்.

தன்னுடைய தனிப்பட்ட ஆசையை மட்டும் நிறைவேற்றிக் கொள்வதில் முழுக் கவனமும் செலுத்தாமல் பொது நலனுடன் சிந்திக்கிறார் தினகர். அவர், ‘எனது ஊரில் உள்ள பள்ளியை மேம்படுத்த உதவிகளை செய்ய உள்ளேன்’ என்று அக்கறையுடன் தெரிவித்துள்ளார்.

MONEY, வெளிநாடு வேலை, கட்டடத் தொழிலாளி, அதிர்ஷ்டம், UAE, TAMILNADU WORKER AT UAE, LOTTERY PRIZE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்