'இந்தியாவிலேயே முதல்முறையாக...' 'திடக்கழிவு மேலாண்மை திட்டம்...' - தமிழக முதல்வர் தொடங்கி வைப்பு...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இந்தியாவிலேயே முதல்முறையாக செயல்திறன் அளவீட்டு முறையில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் தமிழத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை தீவுத்திடலில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சென்னை மாநகராட்சியில் கீழுள்ள 7 மண்டலங்களில் SUMEET URBAN SERVICES 8 ஆண்டுக்கு குப்பை சேகரிக்கும். 62 வார்டுகளில் 16,621 தெருக்களில் திடக்கழிவுகளை சேகரிக்கும் பணியில் தனியார் நிறுவனம் ஈடுபடும்.

வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரித்து தரம் பிரித்து மறுசுழற்சி செய்து நீர், நிலம் மாசுபடுவதை தடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்தை மேம்படுத்தும் விதமாக நாட்டிலேயே முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

இதைத்தவிர தற்போது கொரானா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வரும் இந்த பேரிடர் காலத்திலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எடுத்து வரும் அதிரடியான திட்டங்களால் இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

அதேபோல கொரோனா பேரிடர் காலத்திலும் தமிழக முதல்வர் அறிவித்த தளர்வுகளால், பொருளாதார ரீதியாகவும் தமிழகம் இந்திய அளவில் பெரும் முன்னேற்றம் அடைந்து வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்