"உடம்ப பாத்துக்கோங்க.." கலவரத்தில் காயம் அடைந்த காவலர்.. உடனடியாக பறந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் Call..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலத்தை அடுத்திருக்கும் கனியாமூரில் இயங்கிவரும் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

Advertising
>
Advertising

விடுதியில் தங்கி பயின்று வந்த அந்த மாணவி, சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்ததாக பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டுகளில் பல மாணவிகள் மரணம் அடைந்திருப்பதாகவும் இதற்கு காரணமான பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, சென்னை - சேலம் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் மாணவியின் உறவினர்கள் ஈடுபட்டனர்.

அப்படி ஒரு சூழ்நிலையில், பள்ளியை மூடக் கோரி, நேற்று காலை போராட்டத்திலும் பொது மக்கள் குதித்தனர். தொடர்ந்து, பள்ளி வாகனங்கள் மீது போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வாகனத்தையும் போராட்டக்காரர்கள் மறித்ததால் கள்ளக்குறிச்சியே பரபரப்பாகியது. இதனையடுத்து 400 போலீஸ் அதிகாரிகள் அங்கே குவிக்கப்பட்டனர்.

இதனிடையே, உயிரிழந்த மாணவியின் தாய் செல்வி, பள்ளி நிர்வாகம் மீது கேள்விகளை எழுப்பி இருந்ததும், பின்னர் பள்ளியின் செயலாளர் விளக்கமும் அளித்திருந்ததும் அடுத்தடுத்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட பலரும் நேராக பள்ளிக்கு ஆய்வு மேற்கொண்டிருந்தனர். இதற்கு மத்தியில், வன்முறையில் ஈடுபட்டிருந்த பலரையும் போலீசார் கைதும் செய்திருந்தனர்.

அதே வேளையில், காவல் துறையை சேர்ந்த சிலருக்கும் இந்த சம்பவத்தின் போது காயம் அடைந்திருந்தது. அப்படி காயம் அடைந்திருந்த காவலர் ஒருவருக்கு, போனில் அழைத்து நலம் விசாரித்தார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். மேலும் அந்த காவலரிடம் உடல்நிலை எப்படி உள்ளது என்பது பற்றியும், சிகிச்சை சிறந்த முறையில் நடைபெறுகிறதா என்பதையும் நலம் விசாரித்த போது, கேட்டு தெரிந்து கொண்டார் முதல்வர் ஸ்டாலின்.

மேலும், நல்ல படியாக உடலை பார்த்துக் கொள்ளும் படியும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தினார். இது தொடர்பான ஆடியோக்கள், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

MKSTALIN, POLICE, KALLAKURICHI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்