உதவி கேட்ட இளைஞர்... "என்கிட்ட சொல்லிடீங்கள்ல"... "நான் பாத்துக்குறேன்"... மாஸ் காட்டிய முதல்வர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அனைவரும் ஊரடங்கை முறையாக கடைபிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது. மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் தினசரி தொழிலாளர்கள் மற்றும் வேறு மாநிலங்கில் பணிபுரிந்து வருபவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் குஜராத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வரும் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் தமிழக முதல்வருக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில், 'ஐயா நான் மத்திய பாதுகாப்பு படையில் குஜராத் அகமதாபாத்தில் பணியில் உள்ளேன். எனது தாயார் 89 வயது வீட்டில் தனியாக உள்ளார். அவருக்கு உடல் நிலை சரியில்லை. எனக்கு தந்தையும் இல்லை சகோதரனும் இல்லை எனது தாயாருக்கு மருத்துவ உதவி தேவை' என பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த முதல்வர், 'தங்கள் தாயாருக்கு தேவையான மருந்துகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. மேலும் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் காய்ச்சலோ, இருமலோ, மூச்சுத்திணறல் உள்ளிட்ட எந்த பிரச்சனைகளும் இல்லை. நலமாக உள்ளார். தாங்கள் தைரியமாக நிம்மதியுடன் இருங்கள்!' என பாதுகாப்பு படை வீரரின் தாயாருக்கு உதவி செய்த புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார்.
முதலமைச்சரின் இந்த நடவடிக்கைக்கு நெட்டிசன்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘சிக்னல் கிடைக்காததால்’... ‘வீட்டுக்கு வெளியே வந்து செல்ஃபோன் பேசிய இளைஞர்’... ‘சென்னையில் நடந்த கோரம்’!
- 'கடையைத் திறக்க முடியுமா? முடியாதா?'.. 'பான் மசாலாவுக்கு அடிமையானவரால்' பெட்டிக்கடை ஓனருக்கு நேர்ந்த 'பெரும் சோகம்!'
- 6 குழந்தைகளுடன் 'மின் மயானத்தில்' வசித்துவரும் 'தாய்!'.. 'விழுப்புரத்தில்' பரிதாபம்!
- 'குறையாத' பாதிப்பால் ஊரடங்கு 'நீட்டிப்பு'... ஆனால் 'குழந்தைகளுக்கு' மட்டும் 'விதிவிலக்கு' அளித்த நாடு... என்ன 'காரணம்?'...
- ஊரடங்கில் ‘செம’ லாபம் பார்த்த ‘நெட்பிளிக்ஸ்’.. 'Money Heist' மட்டுமில்ல ‘இதையும்’ ரொம்ப பேர் பாத்திருக்காங்க..!
- ‘என் கணவர் முகத்தக்கூட பார்க்க முடியலையே’.. கதறியழுத மனைவி.. ஊரடங்கில் நடந்த சோகம்..!
- ‘ஊரடங்கால் வெளியே போக முடியல’.. அதான் ‘இத’ பண்ணலாம்னு நெனச்சோம்.. ‘சபாஷ்’ போட வைத்த கணவன்-மனைவி..!
- “நகை, பணம்தான் ஒன்னும் கெடைக்கல.. சரி, வந்ததுக்கு இதையாச்சும் பண்ணிட்டு போவோம்!”.. 'விநோத' திருடர்கள் செய்த 'வேற லெவல்' சம்பவம்!
- 'உத்தரவை மதிக்காத மக்கள்'... 'எகிறிய கொரோனா பாதிப்பு'... 'வீடு வீடா பேப்பர் போட கூடாது'... ஊரடங்கு தளர்வு வாபஸ்!
- கொளுத்தும் வெயிலில்... கொட்டும் மழையில்... மரத்தின் மீது ஏறி... மாணவர்கள் கல்விக்காக யாரும் செய்யத் துணியாத காரியம்!.. மெய்சிலிர்க்க வைக்கும் நெகிழ்ச்சி சம்பவம்!