'பிரதம' மந்திரி 'வீடு' கட்டும் 'திட்டம்' குறித்து,.. 'தமிழக' முதல்வரின் சிறப்பான 'அறிவிப்பு'!!!.. முழு விவரம் உள்ளே...
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்காக ரூபாய் 1,805 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், 'பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் மத்திய அரசு பங்களிப்புடன் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 2016 - 17 முதல் 2019 - 20 ஆம் ஆண்டு வரை இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் 8,968 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 லட்சத்து 27 ஆயிரத்து 552 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 4 லட்சத்து 1,848 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து என்னால் ஆய்வு செய்யப்பட்டது. தற்போது கட்டுமானப் பொருள்களின் விலையேற்றம் காரணமாகவும், கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாலும், மேற்கண்ட அலகுத் தொகையினைக் கொண்டு ஏழை எளிய மக்கள் வீட்டினை கட்ட இயலாத நிலை உள்ளதாகவும், தகுதியான குடும்பங்கள் வீடுகளை தாங்களே கட்ட இயலாத நிலையில் உள்ளதாகவும் எனது ஆய்வில் தெரிய வந்தது.
எனவே, ஏழை, எளிய மக்களின் கனவான குடியிருப்பு வீடுகட்டுவதை உறுதிப்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசால் ஏற்கெனவே மேற்கூரை அமைக்க கூடுதலாக வழங்கப்பட்டு வந்த ரூ.50 ஆயிரத்தை உயர்த்தி, ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளேன். இதன் மூலம் ஒவ்வொரு வீட்டுக்கும் அலகு தொகை ரூ1 லட்சத்து 70 ஆயிரத்திலிருந்து ரூ.2 லட்சத்து 40 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. இந்த தொகையுடன் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூ.23 ஆயிரத்து 40 மற்றும் தனி நபர் இல்லக் கழிப்பறை கட்ட ரூ.12 ஆயிரம் சேர்த்து மொத்தம் ஒரு வீட்டுக்கு ரூ.2 லட்சத்து 75 ஆயிரத்து 40 வழங்கப்படும். இதற்காக தமிழ்நாடு அரசால் கூடுதலாக ரூ.1,805.48 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இதனால் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் பயன் பெறுவர்' என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தமிழகத்தில் இந்த இடங்களில் எல்லாம்’... ‘புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை’... ‘வெளியான அதிரடி அறிவிப்பு’...!!!
- "தமிழ்நாட்டுல, 'கொரோனா' தொற்று கொறஞ்சுருக்கு... ஆனா பாராட்டத் தான் ஆளில்ல..." 'தமிழக' முதல்வர் கருத்து..
- அரையாண்டு தேர்வு நடக்குமா..? குழப்பத்தில் இருந்த மாணவர்கள்.. அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய தகவல்..!
- ‘அடுத்த 3 நாட்களுக்கு மழை’.. சென்னைக்கு வாய்ப்பு இருக்கா.? வானிலை மையம் முக்கிய தகவல்..!
- அடுத்த 2 நாளைக்கு மழைக்கு வாய்ப்பு இருக்கா..? சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!
- "முதல்வர பத்தி தேவையில்லாம பேசுனா, அப்போ இருக்கு உங்களுக்கு..." 'திமுக'வை எச்சரித்த 'ராஜேந்திர பாலாஜி'...
- "ஆரம்பமே 'அமர்க்களம்' பண்ணிட்டீங்க 'தம்பி'... இன்னும் நெறய ஜெயிக்கணும்..." நடராஜனுக்கு வாழ்த்து சொன்ன 'தமிழக' முதல்வர்!!!
- தொடர்ந்து 3 வருஷமாக ‘முதலிடம்’.. சாதனை படைத்த ‘தமிழ்நாடு’.. பெருமையோடு ‘முதல்வர்’ பதிவிட்ட ட்வீட்..!
- ‘நவம்பர் 29-ல் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை’... ‘இந்தப் பகுதியை நோக்கி நகர வாய்ப்பு’... ‘வானிலை ஆய்வு மையம் தகவல்’...!!!
- ‘நிவர் புயல் எதிரொலி’... ‘அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு’... ‘ தமிழக அரசு நடவடிக்கை’...!!!