'எல்.கே.ஜி' முதல் 'ஐந்தாம்' வகுப்பு வரை ஸ்கூல் லீவ் .. 'வெளி மாநிலங்களுக்கு போகாதீங்க' ... தமிழக முதல்வர் வெளியிட்ட அறிக்கை
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக மக்கள் தேவையின்றி வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டாம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், முன்னெச்சரிக்கையாக பள்ளிகள் மற்றும் திரையரங்குகள் மற்றும் மக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கு தடைகளை விதித்து வருகிறது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களும் இது குறித்து உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். 'கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மக்கள் வெளி மாநிலங்களுக்கு தேவையின்றி செல்ல வேண்டாம். அதே போல முதியவர்கள், நோயாளிகள், குழந்தைகள் ஆகியோர் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பதினைந்து நாட்களுக்கு கூட வேண்டாம்' என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், 'எல்.கே.ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழகத்தின் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் மார்ச் 31 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எல்லையோர பகுதியிலுள்ள மாவட்டங்களில் திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்களை மார்ச் 31 வரை மூட வேண்டும். நோய் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழிபாடு தளங்களில் சுகாதாரத்தை மேற்கொள்ளவேண்டும். அதே போல மக்கள் அடிக்கடி தங்களது கைகளை சோப்பு பயன்படுத்தி சுத்தமாக கழுவ வேண்டும்' எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் சுமார் 100 பேர் வரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கடைசில' என்னையும் அத பண்ண 'வச்சிட்டீங்களே'... 'செலவுதான்' இருந்தாலும் 'அமெரிக்கர்கள்' எல்லோரும் இதை 'பண்ணிக்கோங்க'... அதிபர் 'ட்ரம்ப்' புதிய 'மசோதா'...
- 'இறந்த' உடலை தொடுவதாலோ, எரியூட்டுவதாலோ... 'கொரோனா' பரவுமா?... 'எய்ம்ஸ்' மருத்துவரின் புதிய 'விளக்கம்'...
- 'கொரோனா' அறிகுறியுடன் வந்த '4 பேர்'... 'சாப்பிட்டு' வருவதாக கூறி 'தப்பியோட்டம்'... 'போலீசார்' தீவிர தேடுதல் 'வேட்டை'...
- 'போலோ...' 'ஜெய் கோமாதா கி...' 'ஜெய் கோமாதா கி...' களைகட்டிய 'மாட்டு கோமியம்' பார்ட்டி... சியர்ஸ்... 'மஜா ஆகயா...' 'மஜா ஆகயா...'
- 'அறிவித்தது அறிவித்தது தான்'.... பள்ளிக்குழந்தைகள் 'விடுமுறை' குறித்து 'முதலமைச்சர்' வெளியிட்ட புதிய 'அப்டேட்'....
- “நோய் வந்தா கடவுள்கிட்டதான் வேண்ட முடியும்!... கோவிலுக்கு வராதேனு சொன்னா.. பக்தியா? பகுத்தறிவா? ஆன்மீகமா?”.. ட்விட்டரில் ஆ.ராசா கேள்வி!
- ஒண்ணும் ஆகாது, தைரியமா இருங்க .... 'பீதி'யில் உறைந்து போன மக்களுக்கு .... தைரியம் தரும் 'சுகாதாரத்துறை'!
- 'மதுபானம் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு...' "வாசகம் மட்டும் எழுதி வச்சிருக்கீங்க..." "நீங்க மட்டும் என்ன திருக்குறளையா எழுதி வச்சிருந்தீங்க..." 'திமுக' உறுப்பினருக்கு 'அமைச்சர்' தந்த 'பதில்' ...
- சீனாவில் ‘கொரோனாவை' பரப்பியது 'அமெரிக்கா' தான்... 'மருத்துவ ஆய்விதழ்' மூலம் வெளியான 'அதிர்ச்சித்' தகவல்... வெளிப்படையாக 'மன்னிப்பு' கேட்க சீனா 'வலியுறுத்தல்'...
- 'ஃபோன' எடுத்தா லொக்கு லொக்குன்னு 'சத்தம்' வருது... எங்க பாத்தாலும் 'கொரோனா' பயம்... 'காப்பாத்துங்க' சார்... நாங்க 'புள்ள' குட்டிகாரங்க... 'துரைமுருகன்' கிச்சு... கிச்சு...