‘தக்கலையா?’.. ‘தக்காளியா?’.. அய்யோ பாவம் அவங்களே கன்பியூஸ் ஆயிட்டாங்க..‘பதறவைத்த’ பயணச் சீட்டு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கன்னியாகுமரி அருகே அரசு பேருந்தில் வழங்கப்பட்ட மின்னணு பயணச்சீட்டு ஒன்றில், சென்று சேரும் ஊரின் பெயர் 'தக்கலை' என்பதற்கு பதிலாக 'தக்காளி' என்று அச்சிடப்பட்டிருந்தது சம்பவம் வைரலாகி வருகிறது.
மதுரை மாவட்டம் அரசு போக்குவரத்து பணிமனை போடி கிளையிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டத்திற்கு தினமும் காலை செல்லும் அரசு பேருந்து ஒன்றில் மில்டன் என்பவர் ஒருநாள் பயணம் செய்துள்ளார். மார்த்தாண்டத்தில் இருந்து தக்கலைக்கு பயணம் செய்துள்ள, இவருக்கு வழங்கப்பட்ட மின்னணு பயணச்சீட்டில் தக்கலை என்கிற ஊரின் பெயர் அதற்கு பதிலாக ‘தக்காளி’ என்று அச்சிடப்பட்டிருந்தது. இதை மில்டன் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதை அடுத்து இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
அதாவது தக்கலை என்கிற பெயரை ஆங்கிலத்தில் எழுதினால் THUCKALAY(துக்களை) என்று படிக்கவேண்டிய துயரம் உண்டாகிறது. எனவே ஆங்கிலத்தில் THAKALAI (தக்கலை) என மொழிபெயர்த்தால் அனைவருக்கும் நல்லது என்கிற அளவில் கடந்த 2010ஆம் ஆண்டு பத்மநாபபுரம் நகராட்சிக்குட்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் THAKALAI எனும் வார்த்தையில் ஒரு A மிஸ் ஆக THAKALI (தக்காளி) என்று அப்பயணச் சீட்டில் பதிவாகியது. இதுதான் இந்த வைரல் சம்பவத்துக்கு காரணம். உண்மையைச் சொல்லப்போனால் பத்மநாபபுரம் என்னும் ஊருக்கு தெற்கே உள்ள ஊர் என்பதால் இந்த ஊர் ‘தெற்கு எல்லை’ என அழைக்கப்பட்டு பின்னர் தக்கலை என்று திரிந்து கடைசியில் தற்போது‘தக்காளி’ ஆக மாறி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘13 பேர் பலி!’.. 31 பேர் படுகாயம்.. கண்டெய்னர் லாரி மீது தனியார் சொகுசுப் பேருந்து மோதி.. நொடியில் நடந்த கோர விபத்து!
- ‘சுற்றுலா’ சென்ற இடத்தில்... ‘அதிவேகத்தில்’ பின்னால் வந்த பேருந்தால் ‘கோர’ விபத்து... ‘மதுரையில்’ நேர்ந்த சோகம்...
- ‘பெண்களை இனிமேல் அங்க உட்கார வைக்கக்கூடாது’.. அதிரடி உத்தரவிட்ட அரசு போக்குவரத்துக் கழகம்..!
- சரியாக ‘மூடாத’ கதவால்... கண் ‘இமைக்கும்’ நேரத்தில்... பெண்ணிற்கு நேர்ந்த ‘பயங்கரம்’... ‘அதிர்ச்சி’ வீடியோ...
- அதிவேகத்தில் சென்றப் பேருந்து... மின்கம்பத்தில் இடித்து.. பள்ளத்தில் கவிழ்ந்து நிகழ்ந்த கோரம்... 6 பேர் பலி, 30 பேர் படுகாயம்!
- “அந்த பார்க்ல எறக்கிவிட்ருங்க!”.. “சிட்டி பேருந்தில் நாய் செய்யும் ரெகுலர் வேலை!”.. ஆச்சரியத்தில் பயணிகள்!
- ‘25 அடி' உயரத்தில் இருந்து விழுந்த ‘பேருந்து’... ‘நொடிப்பொழுதில்’ நடந்து முடிந்த ‘பயங்கர’ விபத்து...
- ‘தாறுமாறாக’ ஓடிய அரசுப்பேருந்து... ‘மோதிய’ வேகத்தில்... ஆட்டோவுடன் ‘கிணற்றுக்குள்’ தலைகீழாக விழுந்து கோர விபத்து... ‘20 பேர்’ பலியான சோகம்...
- "பஸ்ஸில் கேட்பாரற்றுக் கிடந்த 5 சவரன் தாலிச்சங்கிலி!"... "உரியவரிடம் ஒப்படைத்த அரசுப் பேருந்து ஊழியர்கள்!!"... "பொதுமக்கள் நெகிழ்ச்சி"
- 'பள்ளி வாகனம் ஏறி'... 'உடல் நசுங்கி'... '3 வயது குழந்தைக்கு நடந்த பரிதாபம்!'...