"அங்க சட்டை, வேட்டியெல்லாம் கிழியுது..".. ராகுல் காந்தி பேச்சுக்கு அண்ணாமலை பரபரப்பு பதில் பேச்சு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்க்கை வரலாறை "உங்களில் ஒருவன்" என்னும் நூலாக எழுதியுள்ளார். நேற்று சென்னையில் நடைபெற்ற விழாவில் இந்தப் புத்தகத்தை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி வெளியிட்டார். அப்போது பேசிய ராகுல் பிரதமர் மோடி தமிழகத்தை புரிந்துகொள்ளவில்லை என்றும் அவரது ஆட்சியில் மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன எனவும் தெரிவித்தார்.

Advertising
>
Advertising

மஹா சிவராத்திரியில் விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு போன பக்தர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. விருதாச்சலத்தில் பரபரப்பு..!

இந்நிலையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை, ராகுல் காந்தியை விமர்சித்துள்ளார்.

2024 தேர்தல்

நேற்று சென்னையில் நடைபெற்ற மத்திய பட்ஜெட் மீதான விளக்க கூட்டத்தில் கலந்துகொண்ட அண்ணாமலை அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது," தமிழக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் கலந்துகொண்ட கூட்டம் பாஜக அலுவலகத்தில் சிறப்பாக நடந்து முடிந்தது. தொடர்ந்து நாங்கள் நம்பிக்கையுடன் முன்னேற இருக்கிறோம். தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி மீதுள்ள நம்பிக்கை மேலோங்கி உள்ளது. 2024 தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு மிகப்பெரிய வெற்றியை மக்கள் அளிப்பார்கள்" என்றார்.

முரண்பாடு

முதல்வரின் நூல் வெளியீட்டு விழா பற்றி பேசிய அண்ணாமலை," முதல்வருக்கு நான் முதலில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். எமெர்ஜென்சி காலத்தில் மிசா சட்டத்தின் மூலமாக சிறை சென்றதை ஸ்டாலின் அவர்கள், இருண்ட காலமாக கூறினார். ஆனால், எமெர்ஜென்சியை கொண்டு வந்ததே இந்திரா காந்திதான். இப்போது அவருடைய பேரனை அழைத்து புத்தக வெளியீட்டு விழாவை அவர் நடத்தி இருப்பது எனக்கு நகைச்சுவையை தருகிறது. எப்படி காங்கிரஸ் திமுக கூட்டணி முரண்பாடாக இருக்கிறதோ, அதே போல தான் முதல்வரின் பேச்சு கூட முரண்பாடாக இருக்கிறது" என்றார்.

வேட்டி, சட்டை எல்லாம் கிழியுது

இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் பேச்சிற்கு பதில் அளித்த அண்ணாமலை," இந்தியா என்பது மாநிலங்கள் இணைந்து உருவாகவில்லை. இங்கே மாநிலங்கள் மொழியின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன. உண்மையிலேயே ராகுல் காந்தி சமரசம் செய்ய விரும்பினால் சத்திய மூர்த்தி பவனில் நிகழும் காங்கிரஸ் கட்சியினருக்கு இடையேயான சண்டையை சமரசம் செய்ய வேண்டும். அங்கே தான் சட்டை, வேட்டிகள் எல்லாம் கிழிந்து கொண்டிருக்கின்றன" என்றார்.

மேலும், "ராகுல் காந்தி இந்தியாவின் வரலாற்றை மாற்றி பேசுகிறார். அவற்றை விடுத்து அவர் உண்மையை பேசவேண்டும். தேவையில்லாமல் பாரதிய ஜனதா கட்சியை சீண்டிப்பார்க்க வேண்டாம்" எனவும் அண்ணாமலை கூறினார்.

பாம்களுக்கெல்லாம் அப்பன் இந்த vacuum bomb.. உக்ரைன் மீது ரஷ்யா வீசிய குண்டு பற்றி தெரியுமா?.. அதிரவைக்கும் பின்னணி..!

TAMILNADU, BJP, TAMILNADU BJP HEAD ANNAMALAI, RAHUL GANDHI, அண்ணாமலை, ராகுல் காந்தி, முதல்வர் ஸ்டாலின்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்