"இதுக்காகவா டா இப்படி பண்ணி தொலைச்சே",,.. "'ஒரு' வார்த்த சொல்லியிருக்கலாமே"... குடும்பத்தையே 'சுக்கு' நூறாக்கிய 'துயரம்'!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா தொற்று பரவல் காரணமாக, நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த நான்கைந்து மாதங்களாக நாடெங்கும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்படாமல் இருந்து வருகிறது. இதன் காரணமாக, பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பகுதியை அடுத்த நேதாஜி நகரை சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் ஆன்லைன் வழியாக பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இணைய வழியாக நடத்தப்படும் பாடங்கள் தனக்கு புரியாமல் இருந்ததால் அந்த சிறுவர் அதிகம் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதன் காரணமாக, அந்த சிறுவன் விஷ மாத்திரைகளை உண்டு வீட்டிலேயே மயங்கிக் கிடந்துள்ளார். ஆபத்தான நிலையில், அவரை தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக, தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள செல்போன் இல்லாத நிலையிலும், வேறு சில காரணங்களுக்காகவும் பல மாணவர்கள் இது போன்ற தவறான முடிவுகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட்...' 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' 'அதிகரிக்கும் பலி எண்ணிக்கை...' - இன்னும் கூடுதல் தகவல்கள்...!
- “செம்ம ஃபார்மில் அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ்!”.. பின்ன சும்மாவா? பூர்வீகம் தமிழ்நாடாச்சா!!.. ஆச்சர்யத் தகவல்கள்!
- 'இந்தியாவிலேயே தமிழ்நாட்டுல தான் ஃபர்ஸ்ட்...' 'அறிமுகமாகும் அம்மா கோவிட்-19 வீட்டு பராமரிப்பு திட்டம்...' - இதன் பயன்கள் என்ன...?
- “செல்போனில் வந்த லிங்க்.. ஒரே ஒரு சிங்கிள் கிளிக்”... ‘கல்லூரி’ பெண்ணுக்கு நேர்ந்த ‘அதிர்ச்சி’ சம்பவம்!
- ”வீட்ல சிக்னல் கிடைக்கல... ஆனா, ’ஆன்லைன்’ கிளாஸ் அட்டண்ட் பண்ணனும்...”’ - தினமும் மலை ஏறி, உச்சிக்கு சென்று படிக்கும் ’சின்சியர்’ மாணவன் - குவியும் பாராட்டுகள்!!!
- "பரோட்டா சாப்ட்டு எத்தன நாளாச்சு"... 'சீக்கிரம் போய் வாங்கிட்டு வருவோம்'... சுவரேறி குதித்து 'பரோட்டா' வாங்கி திரும்பிய கொரோனா 'நோயாளி'... 'பகீர்' சம்பவம்!!!
- "'கொரோனா' எல்லாம் போயே போச்சு!!!" - குணமாகி, மீண்டும் ‘களத்தில்’ இறங்கும் தமிழக 'அமைச்சர்'!
- 'பசங்களா ரெடியா இருங்க'... 'அரசு பள்ளிகளில் ஆன்லைன் கல்வி'... 'இந்த தேதி முதல் ஆரம்பம்'... அமைச்சர் செங்கோட்டையன்!
- தமிழ்நாடு போலீஸ் அதிரடி உத்தரவு: ‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ இயங்க திடீர் 'தடை'! - சாத்தான்குளம் விவகாரத்தில் 'மாவட்டங்களில்' நடவடிக்கை!
- 'இந்தியா'வோட... இந்த '8' மாநிலங்கள்ல தான்... 85% பேர் கொரோனாவால பாதிக்கப்பட்டு இருக்காங்க!