'அவரை கூப்பிடுங்க'... 'கணவருக்காக காத்திருந்த தமிழிசை'... 'ஆளுநர் பதவியேற்பின்போது' நடந்த சுவாரசிய சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் ஆகத் தமிழிசை சவுந்தரராஜன் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.

தமிழக பா.ஜ.கவின் தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 2019-ம் ஆண்டு தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதனிடையே புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராகப் பதவிவகித்த கிரண்பேடிக்கு எதிராக அம்மாநிலத்தின் முதல்வர் நாராயணசாமி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தத்துக்குப் புகார் தெரிவித்தார். இதையடுத்து, கிரண்பேடியை ஆளுநர் பொறுப்பிலிருந்து விடுவித்தார் ராம்நாத் கோவிந்த்.

இந்நிலையில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன்க்கு கூடுதலாகப் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் பொறுப்பு வழங்கப்பட்டது. அதனையடுத்து, இன்று காலையில் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராகத் தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்றார். அவருக்குச் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அந்த நேரம் சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நடைபெற்றது. குடியரசுத் தலைவரிடமிருந்து அளிக்கப்பட்ட வாரண்ட் எனக் கூறப்படும் கடிதத்தைத் தமிழிசை சவுந்தரராஜன் கையில் கொண்டுவரவில்லை. அதேநேரம் தலைமை நீதிபதி பதவிப் பிரமாணத்தைப் படிக்கத் தயாரானபோது, தமிழிசை அந்த கடிதத்தை தேடினார். அது தன்னிடம் இல்லை என்பதும் மேஜையில் இருப்பதை உணர்ந்து அவர் தனது கணவரான டாக்டர் சௌந்தரராஜனிடம் தெரிவித்தார்.

உடனடியாக டாக்டர் சௌந்தரராஜன் உள்ளே சென்று அந்த வாரண்ட் பேப்பரை எடுத்து வந்தார். அதற்குள் ஆளுநரின் செயலர் தன்னிடம் ஒரு நகல் இருப்பதாகக் குறிப்பிட்டார். இதனால் "அவரை கூப்பிடுங்கள்" என இரண்டுமுறை தமிழிசை கூறினார். அதற்குள் டாக்டர் சௌந்தரராஜன் வந்து வாரன்ட் காப்பியை கொடுத்தார். கணவருக்காகக் காத்திருந்த பிறகுதான் அவர் துணை ஆளுநராகப் பதவி ஏற்றுக் கொண்டார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்