இன்றைய முக்கியச் செய்திகள்.. ஒரு வரியில்.. ஒரு நிமிட வாசிப்பில்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

1, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், கடலூர், நாகை, விழுப்புரம், அரியலூர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை விடைப்பெறும்  என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

2, ‘ஆளுநர் உரையில் சொல்லிக் கொள்ள எதுவும் இல்லை, அது ஆளுங்கட்சியின் நகைச்சுவை உரை’ என்று திமுக தலைவர் ஸ்டாலின் ட்வீட் பதிவிட்டுள்ளார். 

3, ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு அவரது தந்தை அளித்த விண்ணப்பத்தை 4 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

4, தமிழக சட்டப்பேரவையின் 2ஆம் நாள் நிகழ்வு சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது.

5, மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை நாட்டை பலப்படுத்தும் வகையில் இருக்கும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். 

6, இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது டிவெண்டி டிவெண்டி கிரிக்கெட் போட்டி இந்தூரில் இன்று நடைபெறுகிறது.

7, பொங்கல் பரிசு தொகுப்பினை நியாயவிலைக் கடைகளில், வரும் வியாழக்கிழமை முதல் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

8, குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானத்தை எடுக்காததால் தமிழக சட்டப்பேரவையில் இருந்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதுபற்றி பேசிய ஸ்டாலின், நாடே பற்றி எரிகிறது, ஆங்காங்கே கலவரம், துப்பாக்கிச் சூடு என நடக்கும்போது இதைப் பற்றி விவாதிக்க அவை மறுப்பதாக குறிப்பிட்டுள்ளார். 

NEWS, TODAY, HEADLINES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்