இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

1. ஓமனிலிருந்து மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 8 பேர் மாயம் மசீரா தீவில் இருந்து மீன்பிடிக்க சென்றவர்களை காணவில்லை என்றும், கடந்த 14ம் தேதி 8 பேரும் மீன்பிடிக்க சென்றதில்,ராமநாதபுரம் நம்புதாளையை சேர்ந்த 5 பேரும், குளச்சலை சேர்ந்த 3 பேரும் மாயமாகியுள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 77.28  காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ. 71.09   காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 16 காசுகள் அதிகரித்து,டீசல் விலை 11 காசுகள் அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.

3.பவானிசாகர் அணை நீர்மட்டம் - 96.04 அடி, நீர்இருப்பு - 25.7 டிஎம்சி, நீர்வரத்து - 2,753 கனஅடி, வெளியேற்றம் - 2,600 கனஅடியாக உள்ளது.

4.மாணவர்களின் விவரங்கள் 24 அரசு மருத்துவ கல்லூரிகளிலும் சரிபார்க்கப்பட்டுவிட்டதாகவும், அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களின் விவரங்கள் சரியாக உள்ளதாகவும், அதில் எந்த முறைகேடுகளும் இல்லை என்றும் மருத்துவ கல்வி இயக்குனரகம் தகவல் தெரிவித்துள்ளது.

5.நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக, 150 மாணவர்களின் ஆவணங்களை சோதனை செய்ததில் ஒரு மாணவன், ஒரு மாணவி மீது சந்தேகம் எழுந்ததாகவும், சந்தேகம் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டியது தேர்வுக் குழுவின் வேலை என்றும் 2 மாணவர்களின் புகைப்படங்கள் வேறு மாதிரி தெரிந்ததால் சந்தேகம் எழுந்ததாகவும், ஆனால் மாணவர்களின் புகைப்படம்தான் என 2 மாணவர்களின் பெற்றோரும் உறுதியளித்துள்ளதாகவும் கோவை பிஎஸ்ஜி மருத்துவ கல்லூரி டீன் ராமலிங்கம் பேட்டி அளித்துள்ளார்.

6.திருச்சி முக்கொம்பு அணைக்கு நீர்வரத்து 41,478 கன அடி. முக்கொம்பு அணையில் இருந்து காவிரியில் 28,671 கன அடி, கொள்ளிடம் ஆற்றில் 11,727 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நிர்வரத்து 40,000 கனஅடியில் இருந்து 27,500 கன அடியாக குறைந்தது.

7. மாமல்லபுரம் கடற்கரை நகரம் புதுப்பொலிவு பெற்று வருகிறது. பிரதமர் மோடி மற்றும் சீன அதிபரின் வருகைக்காக துரித கதியில் பராமரிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

8. விக்ரம் லேண்டரை கிட்டத்தட்ட நெருங்கிவிட்டதாகவும், புகைப்படங்களை வெளியிடுவது மட்டும்தான் அடுத்தகட்ட அப்டேட்டாக இருக்கும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.

9. கீழடியில் 5ம் கட்ட அகழாய்வில் இதுவரை 680 பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்றும் 5ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் செப்டம்பர் மாதம் 30ம் தேதி நிறைவுபெறுகிறது என்றும் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

10. புனே நகரில் கொட்டித் தீர்த்த கனமழையால் 15க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 16,000 பேர் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

NEWS, HEADLINES, TODAY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்