இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

1. அயோத்தி தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் எந்த கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

2. அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டத்தை தவிர்த்திடுங்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

3. வங்க கடலில் உருவான புல்புல் புயல் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

4. மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில், சிவசேனாவுக்கு ஆதரவு கிடையாது என தேசியவாத காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

5. மீனாட்சி அம்மன் கோயிலில் நாளை முதல் இலவச லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது.

6. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் என தகவல் வெளியாகியுள்ளது.

7. ட்விட்டரில் ப்ளூ டிக் ஒப்புதல் வழங்குவதில் சாதிய பாகுபாடு பார்க்கப்படுவதாக பட்டியலின செயற்பாட்டாளர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

8. இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு இடையேயான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.

9. சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி நவம்பர் 11ஆம் தேதி பதவியேற்கிறார்.

10. போக்கிடம் இன்றி அரசியலுக்கு வரவில்லை என பரமக்குடியில் தனது தந்தை சிலை திறப்பு விழாவில் கமல்ஹாசன் பேசியுள்ளார்.

HBDKAMALHAASAN, HEADLINES, INDVSBAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்