இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

1. புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதி எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்ட ஜான்குமாருக்கு சபாநாயகர் சிவக்கொழுந்து பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

2. சென்னையில் பெட்ரோல் விலை 3 காசுகள் குறைந்து லிட்டர் ரூ.75.69-க்கும், டீசல் விலை 3 காசுகள் குறைந்து லிட்டர் ரூ .69.52-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

3. அரசு மருத்துவர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ் பெறப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 8 நாட்களாக நீடித்து வந்த போராட்டம்  முடிவுக்கு வந்தது. பணிக்கு திரும்பாவிட்டால் நடவடிக்கை என ஏற்கனவே அரசு  எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அமைச்சர் ஆகியோரின் வேண்டுகோளை ஏற்று தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக போராட்டக்குழு அறிவித்துள்ளதோடு, போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் மீதான நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

4. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக உறுப்பினர்களுக்கு இன்று தலைமை செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில், சபாநாயகர் தனபால் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

5. லட்சத் தீவுகள் அருகே நிலைகொண்டிருந்த மஹா புயல், வலுப்பெற்று தீவிர புயலாக மாறியதால் தமிழகம் மற்றும் கேரளாவில் பரவலாக கனமழை பொழியும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

6. வரும் நவம்பர் 7-ஆம் தேதி வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்காக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அமெரிக்கா செல்கிறார். 

TODAY, NEWS, HEADLINES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்