இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

1. மகாத்மா காந்தியின் 72-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் காந்தியின் புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

2. ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது இளைஞர் திடீரென துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

3. பிப்ரவரி 1ம் தேதி முதல் கோவை-மேட்டுப்பாளையம் இடையே கூடுதலாக ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

4. குரூப் 4-ஐ தொடர்ந்து குரூப் 2ஏ தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சம்மன் அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருதாக தகவல் வெளியாகியுள்ளது.

5. மத்திய கிழக்கு நாடான ஐக்கிய அரபு அமீரகத்திலும் கொரனோ வைரஸ் பரவியதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

6. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது.

7.  அவசியம் இல்லாமல் சீனாவுக்கு செல்லவேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

8. நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது.

9. பட்டப்பகலில் ஒரு ஜனநாயகப் படுகொலை. கோவில்பட்டி ஒன்றியத் தலைவர் தேர்தலில் மொத்தமுள்ள 19 உறுப்பினர்களில் திமுகவுக்கு பெரும்பான்மை 10  உறுப்பினர்கள் இருந்தபோதும், அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது என கனிமொழி எம்.பி. ட்வீட் செய்துள்ளார்.

10. தேசபக்தி கொண்ட இந்தியர் என கூறப்படும் நபரால் மகாத்மா காந்தி இதே நாளில் கொல்லப்பட்டார் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

MAHATMAGANDHI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்