இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

1. நேற்றுவரை ரூ.100 விற்கப்பட்ட பெரிய வெங்காயம் இன்று ரூ.30 முதல் ரூ.40 வரை விற்கபடுகிறது. அதேபோல் ரூ.200 விற்கப்பட்ட சின்ன வெங்காயம் ரூ.40 முதல் ரூ.60 வரை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்கப்படுகிறது.

2. தேசிய பட்டியலினத்தோர் நல ஆணையத்தை கலைக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

3. சீனாவில் கொரனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளதாகவும், மேலும் 1,300 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

4. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 11 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

5. ஐபிஎல் டி20 லீக் வரும் மார்ச் மாதம் 29ம் தேதி தொடங்கி மே 24ம் தேதி முடிவடையும் என தகவல் வெளியாகியுள்ளது.

6. கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து நிர்பயா குற்றவாளி முகேஷ் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது.

7. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.76.44  காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.70.33 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

8. சென்னையில் அயனாவரம் மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் பிப்ரவரி 1ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

9. இந்தாண்டு 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றம் இல்லை, திட்டமிட்டபடி நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

10. டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு தடைவிதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் விவசாயிகள் சங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது.

HEADLINES, ONION, TOPNEWS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்