இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

1. அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.

2. ஏர்இந்தியாவின் 100% பங்குகளையும் தனியாருக்கு விற்க போவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

3. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 15 காசுகள் குறைந்து ரூ.76.56க்கும்,  ஒரு லிட்டர் டீசல் விலை 26 காசுகள் குறைந்து ரூ.70.47க்கு விற்பனை செய்யப்படுகிறது.

4. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

5. டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் மேலும் 3 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.

6. ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக நாளை திமுக சார்பில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி தர மறுப்பு தெரிவித்துள்ளது.

7. ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீச முயன்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

8. திருச்சியில் ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்த செல்போன் கடை உரிமையாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

9. தமிழகத்தில் கொரனா வைரஸ் தாக்குதல் இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

10. நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

HEADLINES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்