இன்றைய முக்கியச் செய்திகள்.. ஒரு வரியில்.. ஒரு நிமிட வாசிப்பில்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

1, கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு  2 ஆயிரத்து 500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

2, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் அடுத்த இரு தினங்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. 

3, நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்று வரும் 13-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா, 15 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. இதில் தடகளத்தில் மட்டும் இந்தியா 5 தங்கப் பதக்கம் பெற்றுள்ளது.

4, இஸ்ரோ தயாரித்த பிஎஸ்எல்வி சி-48 ராக்கெட்டானது வணிக ரீதியிலான 9 செயற்கைகோள்களுடன் வரும் 11ம் தேதி விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். 

5, கடந்த 127 ஆண்டுகளில், தற்போதுதான் அதிக அளவில் அரபிக்கடலில் புயல் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வுமையம் ஆச்சர்யமாகக் கூறியுள்ளது.

6, ஆறு முறை தமிழக முதலமைச்சர், 29 ஆண்டுகள் அதிமுகவின் பொதுச்செயலாளர், 17 ஆண்டுகள் திரையுலகில் முன்னணி நடிகை உள்ளிட்ட பெருமைகளுக்குச் சொந்தக் காரரான, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்து இன்றுடன் 3 ஆண்டுகள் ஆன நிலையில், அவரது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 

7, சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வரும் சசிகலாவுக்குச் சொந்தமான தஞ்சாவூர் அருகே மகர் நோன்பு சாவடி பகுதியில் இருக்கும் வீட்டை, பழைய கட்டிடமாக இருப்பதால், தகுதியற்றதாக கணக்கெடுக்கப்பட்டு, இடிக்கப்பட வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

8. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணை தலைவர்  அரசக்குமார், அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். பாஜக தலைமையை பற்றி, தான் விமர்சிக்க விரும்பவில்லை என கூறிய அவர், கட்சிக்குள் சிலர் தன்னிடம் பேசியதையெல்லாம் காதிலேயே கேட்க முடியாத அளவுக்கு தரம் தாழ்ந்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார். 

NEWS, HEADLINES, TODAY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்