இன்றைய முக்கியச் செய்திகள்.. ஒரு வரியில்.. ஒரு நிமிட வாசிப்பில்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

1, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 77 .91 காசுக்கும்,  டீசல் விலை லிட்டருக்கு ரூ.69. 53 காசுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

2, 2012  முதல் 2016 வரை, தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது தொடரப்பட்ட 5 அவதூறு வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன.

3, நிலவில் விழுந்து நொறுங்கிய விக்ரம் லேண்டரை இஸ்ரோவின் ஆர்பிட்டர் முன்பே கண்டுபிடித்து விட்டது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். கண்டுபிடித்தது குறித்த தகவலை இஸ்ரோ இணையதளத்தில் ஏற்கனவே வெளியிட்டு விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். 

5, டிச.,2ம் தேதி அன்று, ஒத்திவைக்கப்பட்ட இளநிலை செமஸ்டர் தேர்வுகள் டிச.,13ம் தேதியும், முதுநிலை செமஸ்டர் தேர்வுகள் டிச.,31ம் தேதியும் நடைபெற உள்ளதாக அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.

6, ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் 106 நாட்கள் சிறைவாசத்தில் இருந்ததைத் தொடர்ந்து, ஆதாரங்களை கலைக்கும் முயற்சியிலேயோ அல்லது சாட்சியங்களை மாற்றும் முயற்சியிலேயோ ஈடுபடக்கூடாத என்கிற நிபந்தனைகளுடன் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஜாமினில் வெளிவிடப்பட்டுள்ளார். 

7, சூடான் நாட்டில் உள்ள செராமிக் தொழிற்சாலையில் எல்பிஜி சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட தீவிபத்தில் 18 இந்தியர்கள் உட்பட 23 பேர் பலியாகியுள்ளனர். இதில் தமிழர்களும் அடங்குவர். மேலும், இந்தியர்கள் உட்பட 130 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

NEWS, TODAY, HEADLINES, VIJAYAKANTH, PETROL PRICE, ISRO, VIKRAMLANDER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்