1. தமிழகத்தில் சுனாமி தாக்குதலின் 15 ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனால் நாகை, கடலூர் மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க இன்று கடலுக்குச் செல்லவில்லை.
2. சூரிய கிரகணத்தை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோயில் மாலை 4 மணி வரை நடை சாத்தப்படும் என்று தேவசம்போர்டு தகவல் தெரிவித்துள்ளது.
3. ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் தலைமையிலான புதிய அரசின் பதவியேற்பு விழாவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
4. மேகம் மறைத்ததால் சூரிய கிரகணத்தை பார்க்க முடியாமல் போனதாக பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
5. டெல்டா மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
6. இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களும் இந்து சமூகத்தை சேர்ந்தவர்கள் என ஹைதராபாத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
7. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.77.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.70.93 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
8. இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் தனது ஓய்வை அறிவிப்பை வெளியிட்டார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்