இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

1. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 9 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி48 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

2. மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் பிராவோ சந்தித்து பேசினார்.

3. இலங்கை, பூடான் நாடுகளை குடியுரிமை மசோதாவில் சேர்க்காதது ஏன்? என்றும் மதத்தின் பெயரால் துன்புறுத்தப்படுபவர்களுக்கு மட்டும் குடியுரிமை ஏன்? என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

4. தன்னை பயன்படுத்தி பரமசிவன் கைலாசத்தை உருவாக்குவதாக நித்யானந்தா புது வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.

5. நோபல் பரிசு வழங்கும் விழாவில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுக்கு தேர்வான இந்தியர் அபஜித் பேன்ர்ஜி மற்றும் அவரது மனைவி இந்தியாவின் பாரம்பரிய உடையணிந்து கலந்துகொண்டனர்.

6. உள்ளாட்சித் தேர்தலில் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என கூறி திமுக கூட்டணி தொடர்ந்த வழக்கில், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

7. ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

8. உள்ளாட்சி தேர்தலை சந்திக்க எங்களுக்கு அச்சமில்லை, முறையாக நடக்கவே நீதிமன்றத்தை நாடினோம் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

9. மகாகவி பாரதியார் என்றழைக்கப்படும் மாமனிதர் சுப்பிரமணிய பாரதியின் பிறந்தநாளன்று அவரை நினைவு கூர்கிறேன். அவரது எண்ணங்களும் பணிகளும் இன்றைக்கும் நம்மை எழுச்சியூட்டும் விதமாகவே உள்ளன என பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

10. இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான கடைசி டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.

HEADLINES, BHARATHIYAR, PSLVC48, INDVWI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்