இன்றைய முக்கியச் செய்திகள்.. ஒரு வரியில்.. ஒரு நிமிட வாசிப்பில்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இன்றைய (டிசம்பர் 3) முக்கியச் செய்திகள் சுருக்கமாக ஓரிரு வரிகளில் பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளன.

1, நாசாவின் செயற்கைக்கோள் எடுத்த நிலவின் புகைப்படங்களை தொடர்ந்து, இந்தியா அனுப்பி விழுந்து நொறுங்கிய விக்ரம் லேண்டரின் பாகத்தை ஆய்வு செய்து கண்டறிந்துள்ளார் சென்னை தரமணியில் உள்ள லினக்ஸ் கணினி நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வரும் மதுரையைச் சேர்ந்த சண்முக சுப்பிரமணியன். விக்ரம் லேண்டர் தொடர்பாக தான் கண்டுபிடித்ததை நாசாவுக்கு மின்னஞ்சல் மூலம்  பொறியாளர் சண்முக சுப்பிரமணியன் அனுப்பியதை அடுத்து, இதனை அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகளும் உறுதி செய்து நன்றி தெரிவித்தனர்.

2, சென்னை தி.நகரில் 4வது மாடியில் உள்ள தனியார் நிறுவன அலுவலக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். 

3, நீட் தேர்வில் ஆள்மாறாட்ட முறைகேட்டை தடுக்க கட்டை விரல் ரேகையை பதிவேற்றம் செய்ய தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டுள்ளது.

4, கனமழை காரணமாக திருவாரூர், தூத்துக்குடி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர்களால் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தைப் பொருத்தவரை விருத்தாசலத்தை தவிர்த்த பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

5, சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை 77 ரூபாய் 91 காசாகவும், டீசல் விலை 69 ரூபாய் 53 காசாகவும் உள்ளது. 

NEWS, TODAY, HEADLINES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்