‘என்னை மன்னிச்சிருங்க’.. ‘15 வருசத்துல இப்படி ஒன்னு நடந்ததே இல்ல’.. தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன ‘முக்கிய’ தகவல்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் பெய்து வரும் கனமழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய தகவல் தெரிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

சென்னையில் கடந்த 4 மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. அதில் திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், அண்ணா சாலை, கிண்டி ஆலந்தூர், ஈக்காட்டுதாங்கல், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நாளையும், நாளை மறுநாளும் சென்னையில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று பெய்த மழையில், எம்.ஆர்.சி நகரில் அதிகபட்சமாக 13 மில்லிமீட்டரும், நுங்கம்பாக்கத்தில் 10 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. அதேபோல் மீனம்பாக்கத்தில் 5 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான், சென்னையில் பெய்து வரும் மழை குறித்து முக்கிய தகவல் தெரிவித்துள்ளார். அதில், ‘சென்னையில் 2015-ம் ஆண்டு சராசரியாக 209 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. ஆனால் இந்த ஆண்டு 217 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. 1996, 2005-ம் ஆண்டுகளுக்கு பிறகு அதிகப்படியான மழை நாட்களை கொண்ட ஆண்டாக இந்த ஆண்டு அமைந்துள்ளது.

இதுபோன்ற வானிலை அறிவிப்பை முன்பே அறிவிக்க தவறியதற்கு என்னை மன்னித்து விடுங்கள். கடந்த 15 வருடத்தில் இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே இல்லை. 5 மில்லிமீட்டர் மழை பெய்யும் என கணித்தால் 50 மில்லிமீட்டர் வரை மழை பெய்துள்ளது. ஆனால் இதுபோல் 200 மில்லிமீட்டர் மழை பதிவானதே இல்லை’ என பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்