வாகனங்களுக்கான 'நம்பர் பிளேட்' விதிமுறைகள் மாற்றம்!.. புதிய விதிமுறைகள் என்ன?.. போக்குவரத்து காவல்துறை அதிரடி அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்போக்குவரத்து வாகனச் சட்ட விதிமுறைப்படி நம்பர் பிளேட் இல்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை நகர போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை நகரில் பெரும்பாலான வாகனங்களில் நம்பர் பிளேட்டுகளில் எழுதப்பட்டுள்ள எண்கள், விதிமுறைகளை பின்பற்றாமல் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனால், நம்பர் பிளேட்டுகளும், அதன் எழுத்து வடிவங்களும் எவ்வாறு இருக்க வேண்டும் என காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், '70 சிசிக்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட இரு சக்கர வாகனங்களின் முன்னால் உள்ள நம்பர் பிளேட்டில், எழுத்தின் உயரம் 15 மில்லி மீட்டராகவும், தடிமன் 2.5 மில்லி மீட்டராகவும், இடைவெளி 2.5 மில்லி மீட்டராகவும் எழுதப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருசக்கர வாகனங்களின் பின்னால் உள்ள நம்பர் பிளேட்டில், எழுத்துகள் 35 மில்லி மீட்டர் அளவிலும், 7 மில்லி மீட்டர் தடிமனிலும், 5 மில்லி மீட்டர் இடைவெளியுடன் இருக்க வேண்டும் எனத் கூறப்பட்டுள்ளது. மூன்று சக்கர வாகனங்களில் எழுத்து மற்றும் எண் அளவு 40 மில்லி மீட்டர் உயரமும், 7 மில்லி மீட்டர் தடிமனும், 5 மில்லி மீட்டர் இடைவெளியும் இருக்க வேண்டும் என்றும், 500 சிசிக்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட 3 சக்கர வாகனங்களில் நம்பர் பிளேட்டானது, எண்ணும், எழுத்தும் 35 மில்லி மீட்டர் உயரமும், 7 மில்லி மீட்டர் தடிமனும், 5 மில்லி மீட்டர் இடைவெளியுடனும் எழுதப்பட்டிருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இவை தவிர, மற்ற அனைத்து மோட்டார் வாகனங்களிலும் எழுத்துகள் 65 மில்லிமீட்டர் உயரத்திலும், 10 மில்லி மீட்டர் தடிமனிலும், 10 மில்லி மீட்டர் இடைவெளியுடனும் இடம்பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. அனைத்து தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டும் வெள்ளை நிறத்திலும், எழுத்துகள் கருப்பு நிறத்திலும் எழுதப்பட்டிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதே போன்று, அனைத்து வர்த்தக வாகனங்களிலும் மஞ்சள்நிற போர்டில் கருப்பு நிறத்தில் எண்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “உங்க வீட்ல சூனியம், செய்வினைலாம் வெச்சுருக்காங்க!”.. மக்களின் பயத்தை முதலீடாக்கிய கும்பல்!.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்.. பரபரப்பு சம்பவம்!
- சினிமாவை மிஞ்சிய 'ஹைடெக்' கும்பல்... 'பகீர் சம்பவத்திற்கு பின்னிருந்த சாஃப்ட்வேர் இன்ஜினியர்!'... 'அடுத்தடுத்து வெளியான அதிரவைக்கும் தகவல்கள்!!!...
- '5 போலீசாருக்கு காந்தியடிகள் காவல் விருது...' 'கள்ளச்சாராய ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்டதற்காக...' - தமிழக அரசு அறிவிப்பு...!
- “இனி நல்லகாலம்தான்.. ஜாதக கட்டம் சொல்லுது!”.. ‘குறி’ சொன்ன ‘சாமியார்!’.. ‘நம்பி’ செய்த காரியத்தால் ‘கம்பி’ எண்ணும் ‘கணவன், மனைவி உள்பட 5 பேர்’!
- ராகுல் காந்தி மீது தடியடி நடத்தி... 'அதிரடி'யாக கைது செய்த காவல்துறை!.. நெஞ்சை பிடித்து தள்ளியதால்... உத்தர பிரதேசத்தில் பெரும் பரபரப்பு!
- “காதைக் கிழித்த கணீர் சத்தம்!”.. ஒரு நொடி ஸ்தம்பித்த ‘விளையாட்டு போட்டிகள்!’.. உறைந்து நின்ற நகரம்.. வெளியான காரணம்!
- இந்தியாவின் ஆன்மாவை உலுக்கிய கோரம்!.. உத்தரபிரதேசத்தில் மீண்டும் ஒரு 'நிர்பயா'!?.. அவசர அவசரமாக உடலை தகனம் செய்த காவல்துறை!.. என்ன நடந்தது?
- “தட்றோம்.. தூக்குறோம்!”.. ‘வேறலெவல்’ ப்ளான்களுடன் வந்த ‘கஞ்சா திருடர்கள்’! .. கடைசியில் காத்திருந்த ‘மரண’ பங்கம்!
- தனிமையில் சந்திக்கும் ‘ஜோடிகள்’தான் டார்கெட்.. சிக்கிய ‘சென்னை’ வாலிபர்.. வெளியான ‘திடுக்கிடும்’ தகவல்..!
- VIDEO: சாத்தான்குளம் அருகே தட்டார்மடத்தில்... காரில் கடத்தப்பட்ட இளைஞர் மரணம்!.. காவல் ஆய்வாளர் மீது கொலை வழக்குப் பதிவு!.. சிபிசிஐடி அதிரடி!