இந்தியாவிலேயே தமிழகம் தான் 'இது'ல டாப்!.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்!.. சாத்தியமானது எப்படி?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அனைவருக்கும் உயர்கல்வி கிடைப்பதை உறுதி செய்வதில் தமிழகம் முதல் மாநிலமாக இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை ஓஎம்ஆர்-இல் உள்ள சத்யபாமா கல்லூரியின் 29வது பட்டமளிப்பு விழாவில், தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொலி மூலம் அவர் உரையாற்றினார்.

தமிழகத்தில் உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் விகிதம் 49 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றும், நாட்டிலேயே உயர்கல்வி மாணவர்கள் சேர்க்கை தமிழகத்தில்தான் அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த 80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெறுவதாகவும், 2020-21ம் ஆண்டு உயர்கல்விக்காக 5,502 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதேபோல், சிறந்த முதல் 100 சிறந்த பல்கலைக்கழகங்களில் தமிழகத்தை சேர்ந்த 18 பல்கலைக்கழகங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்