அரையாண்டு 'விடுமுறை' மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு... புதிய தேதி 'குறித்து' விரைவில் அறிவிப்பு?
முகப்பு > செய்திகள் > தமிழகம்உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மறுநாளும் நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதால் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எப்போதும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜனவரி 2-ம் தேதி திறக்கப்படும். ஆனால் அன்றைய தினம் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இருப்பதால், ஜனவரி 3-ம் தேதி பள்ளி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.
இந்தநிலையில் வாக்கு எண்ணிக்கை மறுநாளும் தொடர வாய்ப்புகள் இருப்பதால், ஜனவரி 3-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் உட்பட அனைவரும் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட வேண்டி உள்ளதால் 3-ம் தேதி பள்ளிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
எனவே, பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு அரசுக்கு வேண்டுகோள் விடுத்தது. 4 மற்றும் 5-ம் தேதிகள் சனி, ஞாயிறாக இருப்பதால் பள்ளிகள் 6-ம் தேதி திறக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக தற்போது உயர் அதிகாரிகள் தற்போது ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளனர். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.
மற்ற செய்திகள்
'போதையில்' வந்த வாலிபர்கள் செய்த காரியம்.. 'ரயில்வே கேட்டில்' வைத்து.. 'அடித்து வெளுத்த பொதுமக்கள்!'
தொடர்புடைய செய்திகள்
- 'குளிக்கும் போது ‘இன்ஸ்டாகிராமில்' வீடியோ கால்'...'ஆடிப்போன மாணவி'...சென்னையில் நடந்த பகீர் சம்பவம்!
- ‘குழியில் சிக்கி வெடித்த டயர்’!.. ‘தூக்கி வீசப்பட்ட மாணவர்கள்’!.. நெஞ்சை பதறவைத்த சம்பவம்..!
- 'லீவு விட்டுட்டாங்கனு ஜாலியா போன பையன்'...'திடீர்ன்னு கேட்ட அலறல்'...சென்னையில் நடந்த பரிதாபம்!
- 'இந்த பாடத்தை இப்படி தான் எடுக்கணும்'...'டீச்சரின் மாஸ் ஐடியா'...வைரலாகும் புகைப்படங்கள்!
- ஜனவரி 16-ம் தேதி 'பொங்கல்' விடுமுறை ரத்தா?... பள்ளிக் கல்வித்துறை 'அறிக்கையால்' பரபரப்பு!
- ‘நீ அந்த ஃபோட்டோஸ்லாம் அனுப்பு.. பாலிவுட் நடிகை மாதிரி இருப்ப!'.. பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!
- 'சுவருக்கும், தூணுக்கும் நடுவில் சிக்கித்தவித்த சிறுவன்'...'திக்திக் நிமிடங்கள்'...சென்னையில் பரபரப்பு!
- 'ஃப்ரண்ட்ஸ்தான் காரணம்!'.. 'பெற்றோரை நடுநடுங்க வைத்த 10-ஆம் வகுப்பு மாணவன்'.. 'தந்தையின் பாராட்டுதலுக்குரிய முடிவு'!
- 'எமனாக வந்த ஊஞ்சல்'...'கழுத்தை சுற்றிய நைலான்'...'பெற்றோர் முன்பு சென்னையில்' நடந்த கோரம்!
- ‘தமிழகம்’ முழுவதும்... நாளை முதல் ‘கல்லூரிகளுக்கு’ தொடர் ‘விடுமுறை’.. உயர்கல்வித்துறை அறிவிப்பு...